16 வது ஆசிய கோப்பையின் சூப்பர் 4 போட்டிகள் இலங்கையில் வைத்து நடைபெற்று வருகிறது. இதன் முதல் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இலங்கை அணியும் பங்களாதேஷில் வீழ்த்தியது.
இந்நிலையில் சூப்பர் ஃபோர் சுற்றின் மூன்றாவது போட்டியில் அனைத்து கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு இடையே இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேற்று மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
கடந்த போட்டியில் விரைவாக ஆட்டம் இழந்த இந்திய அணியின் துவக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முதலாவது விக்கெட் இருக்கு 121 ரன்கள் சேர்த்தவர்கள் அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டம் இழந்ததால் இந்திய அணிக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஜோடி சேர்ந்து நிதானமாக தங்களது கணக்கை துவங்கினர். இந்நிலையில் இந்தியா 147 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. நேற்று பெய்த கனமழையின் காரணமாக போட்டி ரிசர்வ்னாலான இன்று தொடரும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று ஆட்டம் துவங்கியதும் அதிரடியாக ஆடத் துவங்கிய விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் தங்களது பேட்டிங்கின் மூலம் பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை மிரட்டினர். பௌண்டரிகளை மட்டும் நம்பிக் கொண்டிருக்காமல் ஒன்று இரண்டு என ரன்களை வேகமாக ஓடியும் சேர்த்தனர். சிறப்பாக ஆடிய இவர்கள் இருவரும் சதம் எடுத்து அசத்தினர். இந்த போட்டியில் விராட் கோலி தனது 47 வது சத்தத்தையும் கே எல் ராகுல் தனது ஆறாவது சதத்தையும் நிறைவு செய்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 50 ஓவர்களில் 356 ரன்களுக்கு இரண்டு விக்கெட் விலை இழந்து இருந்தது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 122 ரன்கள்டனும் கே எல் ராகுல் 116 ரன்கள்டனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
357 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய பாகிஸ்தான் அணி இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சில் ரன் எடுக்க முடியாமல் திணறியது. அந்த அணியின் துவக்க வீரரான இமாமுல் ஹக் 9 ரன்களிலும் பாபர் அசாம் 10 ரன்களில் ஆட்டமிழக்க முகமது ரிஸ்வான் ஒற்றை இலக்க ரண்களில் ஆட்டம் இழந்தார். இதன் பிறகு பாகிஸ்தான் அணியின் எந்த ஒரு வீரர்களும் நிலைத்து நின்று ஆடவில்லை. அந்த அணியின் துவக்க வீரர் ஃபக்கர் ஜமான் அதிகபட்சமாக 27 ரன்கள் எடுத்திருந்தார். மேலும் அகா சல்மான் 23 ரண்களும் இப்திகார் அகமது 23 ரண்களும் எடுத்திருந்தனர். மற்ற பின் வரிசைக்காரர்கள் ஒற்றை இலக்கணங்களில் ஆட்டம் இழந்த நிலையில் அந்த அணியின் பந்துவீச்சாளர்களான ஹாரிஸ் ரவுப் மற்றும் நசீம் ஷா இருவரும் காயம் காரணமாக டேட்டிங் செய்ய வராததால் பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்களுக்கு எட்டு விக்கெட் களை இழந்த நிலையில் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதன் மூலம் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. இது இந்திய அணி தனது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பெற்ற அதிகபட்ச ரன் வித்தியாச வெற்றியாகும். மேலும் அனைத்து வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் இது இரண்டாவது மிகப்பெரிய வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வரலாற்று வெற்றியுடன் இந்திய அணி ஆசிரியக்கோப்பை போட்டிகளின் சூப்பர் ஃபோர் சுற்றில் தனது முதல் கணக்கை துவங்கி இருக்கிறது.
இந்நிலையில் இந்திய அணி நாளை நடைபெற இருக்கும் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் பட்சத்தில் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். ஒருவேளை நாளை இந்திய அணி தோற்றால் பங்களாதேஷ் அணியுடன் வெள்ளிக்கிழமை நடைபெறும் போட்டியில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். ஆசிய கோப்பை தொடரின் சூப்பர் ஃபோர் சுற்றில் இன்றைய மிகப்பெரிய வெற்றியின் மூலம் இந்திய அணி முதல் இடத்திலும் இந்த தோல்வியின் காரணமாக முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி மூன்றாவது இடத்திற்கும் சென்று இருக்கிறது. இலங்கை அணி தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. நாளைய போட்டியில் இலங்கை தோற்றால் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே நடைபெறும் போட்டியானது அரையிறுதி போட்டி போல இருக்கும்.

