2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரை இறுதிப் போட்டிகள் நாளை நடைபெற இருக்கிறது. முதல் அரை இறுதிப் போட்டி மகாராஷ்டிரா மாநில தலைநகர் மும்பையில் அமைந்துள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது. இந்த மைதானத்தில் தான் 2011 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையிலான இந்திய அணி இரண்டாவது முறையாக உலக கோப்பையை வென்றது.
லீக் சுற்று போட்டிகளின் முடிவில் முதல் நான்கு இடங்களை பெற்ற இந்தியா சவுத் ஆப்பிரிக்கா ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றன நாளை நடைபெற இருக்கும் முதல் அரை இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மும்பையில் விளையாடுகின்றன. இதனைத் தொடர்ந்து வியாழக்கிழமை நடைபெற இருக்கும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் கொல்கத்தாவின் பாரம்பரியமிக்க ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் விளையாட உள்ளன.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதி போட்டியில் மோதுவது இது இரண்டாவது முறையாகும். 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் அரை இறுதிப் போட்டியிலும் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதற்கு பலித்திருக்கும் வகையில் இந்தியா இந்த முறை நியூசிலாந்தை வெல்லும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.
மும்பையின் வான்கடே மைதானம் டேட்டிங் இருக்கு சாதகமான மைதானம் என்றாலும் இங்கு வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முதல் 10 ஓவர்களில் உதவி கிடைக்கும். இந்திய அணி இந்த மைதானத்தில் தான் இலங்கை அணியை 55 ரன்கள் செய்து 32 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்றது. மேலும் இது சிறிய மைதானம் என்பதால் பேட்ஸ்மேன்களுக்கு பெரும்பாலும் சாதகமாக இருக்கும். இந்த மைதானத்தில் ஒரு நாள் போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 438 ஆகும் தென்னாப்பிரிக்கா இந்திய அணிக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு இந்த ரன்களை எட்டி சாதனை படைத்தது.
உலகக் கோப்பை தொடர்பு போன்ற மிக முக்கியமான தொடரின் அரையிறுதி போட்டியில் மலை ஏற்பட்டால் என்ன ஆகும் என சந்தேகமும் ரசிகர்களுக்கு ஏற்பட்டு இருக்கிறது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் உலகக் கோப்பை போட்டி என்பதால் இதன் அரை இறுதிப் போட்டிகள் மிகவும் முக்கியமானவை. எனவே ஐசிசி இரண்டு அரை இறுதி போட்டிகளுக்கும் இறுதிப் போட்டிக்கும் ரிசர்வ் டே அறிவித்திருக்கிறது. அதன்படி போட்டி நடைபெறும் குறித்த நாள் அன்று மழை பெய்தால் போட்டி மறுநாளுக்கு ஒத்தி வைக்கப்படும்.
எனினும் ரிசர்வ் டே அன்றும் மழை பெய்தால் புள்ளிகள் பட்டியலின் அடிப்படையில் அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். முதலாவது அரை இறுதி போட்டி நடைபெறும் மும்பையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை. மும்பையின் வானிலை அறிக்கையின்படி நாளை வெப்பநிலை குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் அதிகபட்சமாக 434 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் தெரிவிக்கிறது. மேலும் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.
16-ம் தேதி நடைபெற இருக்கும் தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே கொல்கத்தாவில் நடைபெற இருக்கும் அரை இறுதிப் போட்டியில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை அறிக்கை தெரிவிக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் மழையால் ஆட்டங்கள் கைவிடப்பட்டால் புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பெற்றிருக்கும் இந்தியா மற்றும் சவுத் ஆப்பிரிக்கா அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

