இப்படித்தான் விளையாடனும்.. பேட்ஸ்மேன்களுக்கே பாடம் எடுத்த பவுலர் குல்தீப் யாதவ்.. தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் சுவாரஸ்யம்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க தொடர்ந்து விளையாடி வருகிறது. இந்த நிலையில் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ் பேட்ஸ்மேன்களை காட்டிலும் சிறப்பான ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் முதல் இன்னிங்ஸ் விளையாடிய தென்னாப்பிரிக்க அணி 489 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்த நிலையில் அதற்குப் பிறகு தொடர்ந்து இந்திய அணி விளையாடுகிறது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி அதற்குப் பிறகு நிதானமற்ற முறையில் விளையாடி விக்கெட்டுகளை இழந்து வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க:டீ சொல்லி வர்றதுக்குள்ளையா.?. கொத்தாக சரியும் இந்திய அணியின் விக்கெட்டுகள்.. இந்தியா தென் ஆப்பிரிக்கா 2வது டெஸ்ட்

- Advertisement -

இதில் தடுப்பாட்டத்தை இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மறக்க, அவர்களுக்கு பாடம் எடுப்பது போல குல்தீப் யாதவ் சிறப்பான தடுப்பாட்ட முறையில் விளையாடி 134 பந்துகளை சந்தித்து 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவர் ரன்கள் அடிக்காவிட்டாலும் ஆட்டத்தில் நீண்ட நேரம் நின்று விளையாடியதற்காக பாராட்டப்பட்டு வருகிறார். மூன்றாவது நாள் ஆட்டம் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ளது. ஒருவேளை இந்திய அணி டிரா செய்தால் அதற்கு குல்தீப் யாதவ் மிக முக்கிய காரணமாக இருப்பார். அவருக்கு அடுத்தபடியாக ஜெய்ஸ்வால் 97 பந்துகளை எதிர்கொண்டு விளையாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles