இன்று நடைபெறுகிற முக்கியமான ஐபிஎல் தொடரின் 59வது லீக் ஆட்டத்தில் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடி வருகிறது.
குஜராத் அணியின் சொந்த மைதானமான அகமதாபாத் ஸ்டேடியத்தில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் சேசிங்க்கு சாதகமாக இருக்கும் என்ற காரணத்தினால் ருத்ராஜ் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன்படி குஜராத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சகா நீக்கப்பட்டு கில் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் களம் இறங்கினார்கள்.
இந்த ஜோடி களமிறங்கியது முதலே சென்னை அணியின் பந்துவீச்சை சிறப்பாக விளையாடியது. பவர் பிளேவின் முடிவில் 50 ரன்கள் தாண்டி இந்த ஜோடி பத்து ஓவர்களுக்குள் நூறு ரன்களை தொட்டது. கில், சுதர்சன் ஜோடி எந்த இடத்திலும் விக்கெட் கொடுப்பதற்கான அறிகுறியை சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு கொடுக்கவில்லை.
இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் கில் தனது முதல் அரை சதத்தினை பதிவு செய்தார். கில் அரை சதம் கடந்து விளையாடிய நிலையில் துஷார் தேஸ் பாண்டே அவரது கேட்ச் வாய்ப்பை வீணடித்தார். அதனைத் தொடர்ந்து பிறகு சாய் சுதர்சனும் தனது அரை சதத்தினை பதிவு செய்த நிலையில் இந்த ஜோடி 200 ரன்களை கடந்து விளையாடியது. மிகவும் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியை சென்னை அணியின் பந்துவீச்சாளர்கள் பிரிக்க மிகவும் சிரமப்பட்டனர்.
இந்தக் கூட்டணியில் கில் 50 பந்துகளில் சதத்தினை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாய் சுதர்சனும் தனது சதத்தினை பதிவு செய்ய முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 210 ரன்கள் குவித்தது. சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடிய நிலையில் 53 பந்துகளை எதிர்கொண்டு ஐந்து பவுண்டரிகள் ஏழு சிக்ஸர்கள் என 103 ரன்கள் விலாசினார். அவரைத் தொடர்ந்து கில்லும் 55 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள், ஏழு சிக்ஸர்கள் என 104 ரன்கள் குவித்த நிலையில் துஷார் தேஷ் பாண்டேவின் பந்துவீச்சில் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அவை தொடர்ந்து டேவிட் மில்லர் 16 ரன்கள் குவிக்க இறுதியாக குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் குவித்தது. பந்துவீச்சாளர்கள் தரப்பில் துஷார் தேஷ் பாண்டே மட்டும் இரண்டு விக்கட்டுகளை கைப்பற்றினார். இந்தப் போட்டியில் குஜராத் அணி சிஎஸ்கேவுக்கு எதிராக இரண்டு சாதனைகளையும் பதிவு செய்திருக்கிறது.
இதையும் படிங்க:நான் அன்னைக்கு சொன்னதுதான்.. டி20 உலக கோப்பையில் விராட் கோலி இதைத்தான் பண்ணனும்.. கங்குலி ஓபன் டாக்
கில் கேப்டனாக தனது முதல் சதத்தினை பதிவு செய்தார். மேலும் சிஎஸ்கே அணிக்கு எதிராக அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரணகளாக 210 ரன்கள் இந்த ஜோடி குவித்திருக்கிறது. இதற்குப் பிறகு இந்த மெகா இலக்கை நோக்கி சென்னை அணி களமிறங்கும் நிலையில் உள்ளது.

