நல்லதுக்கு தான் சொல்றேன்.. அடுத்த மேட்ச் அஸ்வினை எடுக்காதீங்க.. வீரரேந்தர் சேவாக் இந்திய அணிக்கு அறிவுரை.!

தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் முடிவடைந்த ஐந்து ஆட்டங்களில் இந்தியா பாகிஸ்தான் நியூசிலாந்து பங்களாதேஷ் மற்றும் தென்னாபிரிக்கா நிகழ் வெற்றி பெற்றிருக்கின்றன. நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த போட்டியில் இந்திய அணி ஆறு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

- Advertisement -

இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் மிகச் சிறப்பாக பந்துவீசி ஆஸ்திரேலியா அணியை 199 ரன்களுக்கு கட்டுப்படுத்தினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம் பெற்ற மூத்த சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகச் சிறப்பாக பந்து வீசி 10 ஓவர்களில் 34 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரின் போதும் மிகச் சிறப்பாக பந்து வீசினார்.

- Advertisement -

நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வினை அனைத்துப் போட்டிகளுக்கும் பயன்படுத்தாமல் முக்கியமான போட்டிகளில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்தர் சேவாக் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் ரவிச்சந்திரன் அஸ்வினின் உடல்நிலை மற்றும் அவரது வயதை கருத்தில் கொண்டு முக்கியமான போட்டிகளுக்கு மட்டும் அவரை பயன்படுத்த வேண்டும் என இந்திய அணி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

- Advertisement -

இது தொடர்பாக பேசியிருக்கும் சேவாக்” ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக டெல்லியில் நடைபெற இருக்கும் போட்டிக்கு முகமது சமியை இந்திய அணி தேர்வு செய்ய வேண்டும். அந்தப் போட்டியில் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும். டெல்லியின் ஆடுகளம் முன்பு போல் இல்லாமல் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கிறது. மேலும் மைதானத்தின் அளவு சிறியதாக இருப்பதால் வேகுப்பந்துவீச்சாளர் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமாக இருக்கும்” என்று தெரிவித்தார்.

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர்” ரவிச்சந்திரனின் வயது மற்றும் அவரது உடல் தகுதி ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு ஓய்வு வழங்கப்பட வேண்டும். முக்கியமான போட்டிகளுக்கு மட்டும் அவரை இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் முக்கிய போட்டிகளில் அவர் நல்ல மனநிலையில் விளையாடுவதற்கு உதவும்” என தெரிவித்திருக்கிறார். மேலும் கேஎல் ராகுல் குறித்து பேசிய சேவாக்” இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாள ராகுல் டிராவிட் ஆகியோரை நாம் நிச்சயம் பாராட்ட வேண்டும். அவர்கள் கே எல் ராகுலை விக்கெட் கீப்பராக பயன்படுத்தியதோடு ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்ய கேட்டுக் கொண்டது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

- Advertisement -

இசான் கிசான் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து பேசி இருக்கும் சேவாக்” இஷான் கிஷான் ஆப் ஸ்டெம்ப்பிற்கு வெளியே விழுந்த பந்தை அதிரடியாக அடிக்க முனைந்து ஆட்டம் இழந்தார். இதுபோன்று பலமுறை எனக்கும் நடந்திருக்கிறது. அவர் நல்ல பார்மில் இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்து பேசிய சேவாக் ஸ்ரேயாஸ் ஐயர் இரண்டு விக்கெட் விழுந்த போது அந்தப் பந்தை அடிக்க நினைத்திருக்க கூடாது. எனினும் அவர் இளம் வீரர். இது போன்ற போட்டிகளில் இருந்து அனுபவத்தை பெற்றுக் கொள்வார் . இந்தியா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றிருப்பதால் இது போன்ற விஷயங்களை நாம் பெரிது படுத்தாமல் அந்த வீரர்களை பேக் செய்ய வேண்டும்” என தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி நாளை மறுநாள் நடைபெற இருக்கும் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. அதனைத் தொடர்ந்து வருகின்ற 14-ம் தேதி நடைபெற இருக்கும் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அகமதாபாத்தில் வைத்து விளையாட உள்ளது. டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் சுப்மன் கில் இந்திய அணியுடன் டில்லி பயணம் செய்ய மாட்டார் என செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவார் என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles