தற்போது 50 ஓவர் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அக்டோபர் ஐந்தாம் தேதி துவங்கிய உலகக் கோப்பை போட்டிகளில் இதுவரை 30 போட்டிகள் முடிவடைந்து இருக்கின்றன. இன்னும் 15 போட்டிகள் லீக் சுற்றுக்களில் மீதம் இருக்கிறது. நடந்து முடிந்த இந்த 30 போட்டிகளில் விளையாடி ஆறு போட்டிகளிலும் ஆறு வெற்றிகள் உடன் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
இந்தியாவை தொடர்ந்து சவுத் ஆப்பிரிக்கா 10 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் தலா 8 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களில் உள்ளது. ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னணி சுழற் பந்துவீச்சாளர் நாதன் லியொன் உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடும் இரண்டு அணிகள் பற்றிய தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்த போது அஷஸ் டெஸ்ட் தொடரில் காயம் அடைந்த அவர் தற்போது காயத்தில் இருந்து குணமடைந்து வருகிறார். இந்நிலையில் உலகக் கோப்பையில் இறுதிப் போட்டியில் இந்த இரண்டு அணிகள் தான் விளையாடும் என தனது கணிப்பை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் தான் இந்த வருட உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் விளையாடும் என தெரிவித்துள்ளார். மேலும் தென்னாப்பிரிக்கா அபாயகரமான அணியாக இருக்கிறது என்று குறிப்பிட்டு இருக்கும் அவர் சவுத் ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் வரிசை மிகவும் பலமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வாண்டர் டுசன் மூன்றாவது வீரராக களம் இறங்க அவரைத் தொடர்ந்து எய்டன் மார்க்ரம் ஹென்றிக் கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் என மிகவும் அபாயகரமான அணியாக தென்னாப்பிரிக்கா விளங்கி வருவதாக குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இந்த உலகக் கோப்பையில் தொடர்ச்சியாக விளையாடி வெற்றி பெற்று வருவதை குறிப்பிட்டு இருக்கும் அவர் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரண்டு அணிகள் தான் உலக கோப்பையின் இறுதி போட்டியில் விளையாடும் எனத்தான் நம்புவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து பேசி இருக்கும் அவர் ” இந்த வருட உலக கோப்பை போட்டிகளில் இந்தியா நம்பர் ஒன் அணியாக விளங்கி வருகிறது. மேலும் உலகக் கோப்பையை கைப்பற்றும் வாய்ப்புகளும் இந்திய அணிக்கு இருக்கிறது அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெறுவதால் ரசிகர்களின் ஆதரவும் இந்தியாவிற்கு இருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்பு இந்தியாவிற்கு அழுத்தத்தை தரக்கூடிய ஒரு விஷயமாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் பலம் வாய்ந்த அணியாக கருதப்பட்டாலும் அந்த நாட்டு ரசிகர்களின் எதிர்பார்ப்பு அவர்களுக்கு மிகப்பெரிய அழுத்தமாக இருக்கிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இறுதிப் போட்டியில் மோதும் போது ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து அதிக ரன்கள் குவித்தால் அவர்களால் உலகக் கோப்பையை வெல்ல முடியும்” என தான் கருதுவதாக தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணி இதுவரை விளையாட்டு இருக்கும் ஆறு போட்டிகளில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது . அந்த அணியும் நியூசிலாந்து அணியுடன் 8 புள்ளிகளை பகிர்ந்து கொண்டாலும் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலியா மீதி இருக்கும் ஒன்று போட்டிகளில் பங்களாதேஷ் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுடன் விளையாட இருக்கிறது. மறுபுறம் நியூசிலாந்து அணி சவுத் ஆப்பிரிக்கா பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுடன் விளையாட உள்ளது.

