ரஞ்சி ஃபைனல்.. ஆஸி வீரர் பிலிப் ஹக்ஸ் மரணம்.. கேரள அணிக்கு எப்படி உதவியது.. ஐசிசி புதிய விதி என்ன சொல்கிறது

2024/25 சீசனுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரின் அரை இறுதி போட்டிகள் நேற்று முடிவடைந்தது. இந்தப் போட்டிகளின் முடிவில் விதர்பா மற்றும் கேரள அணிகள் ரஞ்சி கோப்பையின் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருக்கின்றன. இந்த 2 அணிகளும் மோதும் ரஞ்சி தொடரின் இறுதிப்போட்டி வருகின்ற 26 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

- Advertisement -

முன்னதாக ரஞ்சி கோப்பை தொடரின் முதல் அரை இறுதிப் போட்டியில் குஜராத் மற்றும் கேரள அணிகள் அகமதாபாத்தில் மோதியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கேரள அணி 457 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனைத் தொடர்ந்து ஆடிய குஜராத் அணி 455 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து கேரள அணி முதல் இன்னிங்ஸில் 2 ரன்கள் முன்னிலை பெற்றது.

- Advertisement -

இதன் பிறகு இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய கேரளா 114 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் இழந்திருந்த போது போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 2 ரன்கள் முன்னிலை அடிப்படையில் கேரள அணி ரஞ்சி கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது. மேலும் நாக்பூரில் நடைபெற்ற மற்றொரு அரை இறுதிப் போட்டியில் விதர்பா அணி ரஞ்சி கோப்பையின் ஜாம்பவான் அணியான மும்பையை 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

- Advertisement -

கேரளா அணி போட்டியை டிரா செய்த போதும் முதல் இன்னிங்ஸில் பெற்ற 2 ரன்கள் முன்னிலை அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது. மேலும் அந்த அணி காலிறுதி போட்டியிலும் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக முதல்இன்னிங்ஸில் பெற்ற 1 ரன் லீட் அடிப்படையில் அரை இறுதிக்கு முன்னேறியதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் பிலிப் ஹக்ஸ் மரணத்தை தொடர்ந்து மாற்றப்பட்ட கிரிக்கெட் விதிகள் கேரள அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறுவதற்கு உதவி இருக்கிறது.

கேரளா மற்றும் குஜராத் அணிகள் விளையாடிய போட்டியின் போது குஜராத் அணி 455 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்திருந்தது. இந்நிலையில் 3 ரன்கள் எடுத்தால் குஜராத் அணி முதல் இன்னிங்ஸில் 1 ரன் முன்னிலை பெரும். இதனால் அந்த அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இந்த பரபரப்பான சூழலில் கேரள அணியின் சுழற் பந்துவீச்சாளர் சர்வட்டே வீசிய பந்தை குஜராத் அணியின் பேட்ஸ்மேன் அர்சன் நக்வஸ்வாலா லெக் சைடில் அடித்தார். அப்போது அவர் அடித்த பந்து ஷாட் லெக் திசையில் பில்டிங் செய்த சல்மான் நிசாரின் ஹெல்மெட்டில் பட்டு ஃபர்ஸ்ட் ஸ்லிப்பில் நின்று கொண்டிருந்த கேப்டன் சச்சின் பேபி கைகளில் தஞ்சம் புகுந்தது.

- Advertisement -

இதனால் குஜராத் அணி கடைசி விக்கெட் இழந்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் கேரள அணிக்கு 2 ரன்கள் முன்னிலை கிடைத்தது. ஆஸ்திரேலிய அணியின் வீரர் பிலிப் ஹக்ஸ் மரணத்தை தொடர்ந்து ஐசிசி மாற்றம் செய்த விதிமுறை கேரள அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. கடந்த 2017 ஆம் வருடம் ஆஸ்திரேலியாவின் ஷெஃபில் ஷீல்ட் கிரிக்கெட் போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் டாஸ்மேனியா அணிகள் மோதின. இந்தப் போட்டியில் நியூ சவுத் வேல்ஸ் அனிக்காக விளையாடிய பிலிப் ஹக்ஸ் 62 ரன்களில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது டாஸ்மேனிய அணி வீரர் சியான் அபாட் வீசிய பந்து பிலிப் ஹக்ஸின் பின்னங் கழுத்தை தாக்கியது. இதனைத் தொடர்ந்து மைதானத்திலேயே மயங்கி விழுந்த ஹக்ஸ் கோமா நிலைக்குச் சென்றார்.

பின்னர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணம் கிரிக்கெட் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பான கேள்வியை சர்வதேச அளவில் எழுப்பியது. இதனைத் தொடர்ந்து கிரிக்கெட் வீரர்களின் ஹெல்மெட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் தொடர்பாகவும் ஐசிசி மற்றும் எம்சிசி பல புதிய விதிமுறைகளை வீரர்கள் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியது. இதன்படி முதல் ஸ்லீப்பைத் தவிர விக்கெட் கீப்பர், ஷார்ட் லெக் மற்றும் சில்லி பாயிண்ட் திசையில் பில்டிங் செய்யும் வீரர்களின் ஹெல்மெட் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களில் பட்டு கேட்ச் பிடித்தாலோ, ரன் அவுட் செய்தாலோ அல்லது ஸ்டம்பிங் செய்தாலோ அது அவுட்டாக கருதப்படும் என விதிமுறைகள் மாற்றப்பட்டது.

இந்த புதிய ரூல்ஸின் அடிப்படையில் கேரள வீரர் நிசாரின் ஹெல்மெட்டில் பட்ட பந்தை சச்சின் பேபி கேட்ச் பிடித்ததால் குஜராத் வீரருக்கு அவுட் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 2 ரன்கள் முன்னிலை பெற்ற கேரளா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது. மேலும் ஐசிசி 2023 ஆம் வருட புதிய விதியின்படி வேக பந்துவீச்சாளர்கள் மற்றும் மித வேக பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது பேட்ஸ்மேன் கல் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விதியும் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles