கடைசி ஓவரில் சென்ற 27 ரன்கள்.. தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்.. கண்ணீருடன் ரியான் பராக்

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 2 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்களை குவித்தது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் மட்டுமே எடுத்தது.

- Advertisement -

ரியான் பராக் பேட்டி

இதனால் லக்னோ அணி புள்ளிப் பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. அதேபோல் ராஜஸ்தான் அணி 8 போட்டிகளில் விளையாடி 6 தோல்வி, 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று 8வது இடத்தில் உள்ளது. இந்த தோல்வி பற்றி ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக் பேசும் போது, இதனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

- Advertisement -

தோல்வியால் ஏற்பட்ட வலியை எப்படி கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் இருக்கிறேன். நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்று புரியவில்லை. 19வது ஓவர் வரை நாங்கள் ஆட்டத்தில் இருந்தோம். என்னை பொறுத்தவரை 19வது ஓவருக்குள் ஆட்டத்தை முடித்திருக்க வேண்டும். அதற்கு நான் பொறுப்பேற்று கொள்கிறேன். 40 ஓவர்களிலும் சிறப்பாக விளையாடினால் மட்டுமே வெல்ல முடியும்.

- Advertisement -

சந்தீப் சர்மா பவுலிங்

பவுலிங்கில் மிகச்சிறப்பாக செயல்பட்டோம். கடைசி ஓவர் மட்டுமே கொஞ்சம் கூடுதலாக ரன்கள் சென்றுவிட்டது. இல்லையென்றால் 165 முதல் 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருப்போம். சந்தீப் சர்மா எப்போதும் நம்பிக்கையாக பவுலராக இருக்கிறார். அவருக்கு கடந்த போட்டி மட்டுமே சிறப்பாக அமையவில்லை.

அதேபோல் லக்னோ அணியின் அப்துல் சமத் மிகச்சிறப்பாக விளையாடினார். இந்த இலக்கை எங்களால் எளிதாக சேஸ் செய்திருக்க முடியும். இன்றைய ஆட்டத்தில் அனைத்தும் சிறப்பாகவே இருந்தது. பிட்ச் பற்றில் எந்த குறையும் கிடையாது. சில பந்துகளால் மட்டுமே இந்த தோல்வியை பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles