ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக அறிமுகம் செய்யப்பட்ட வைபவ் சூர்யவன்ஷி பலரையும் வியப்புக்கு ஆழ்த்தினார். ஐபிஎல் மெகா ஏலத்தில் வைபவ் சூர்யவன்ஷியை ராஜஸ்தான் அணி ரூ.1.1 கோடிக்கு வாங்கிய போது, அது விளம்பரத்திற்கான யுக்தியாக பார்க்கப்பட்டது. ஆனால் சஞ்சு சாம்சன் காயமடைந்த பின், உடனடியாக வைபவ் சூர்யவன்ஷி அறிமுகம் செய்யப்பட்டார்.
முதல் போட்டியிலேயே 20 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, முதல் பந்திலேயே சிக்ஸ் அடித்து அசத்தினார். இதன்பின் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 35 பந்துகளில் சதம் விளாசி பலரையும் வியக்க வைத்தார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மண்ணிலும் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது.
அஸ்வின் – சஞ்சு சாம்சன்
இந்த சூழலில் வைபவ் சூர்யவன்ஷி குறித்து சஞ்சு சாம்சனுடன் அஸ்வின் உரையாடுகையில், அவர் முதல் பந்தில் சிக்ஸ் அடித்த போது, அவருக்கு அதிர்ஷ்டம் இருப்பதாக நினைத்தேன். ஆனால் அந்த பையன் அடுத்தடுத்தக் கட்டத்திற்கு சென்று கொண்டிருந்தான். அவர் ஆடிய ஷாட்ஸின் தரம் என்னை மிரள வைத்தது. ராஜஸ்தான் – சென்னை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டெல்லியில் நடந்தது.
அப்போது பனிஷ் ஷெட்டியுடன் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது நீயும் கொஞ்ச நேரம் இருந்தாய். அந்த உரையாடல் வெறும் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம் பற்றியதாக மட்டும் இல்லை. ஏஎன்றால் அவருக்கு நான் பவுலிங் செய்தேன். முதலில் ரவுண்ட் தி ஸ்டம்ப்ஸில் இருந்து ஒரு பந்தை வீசினார். அதனை எளிதாக அட்டாக் செய்துவிட்டார்.
மிரண்டு போன அஸ்வின்
ஆனால் அடுத்த பந்தை கொஞ்சம் தாமதமாக இழுத்து வீசினார். நீ விக்கெட் கீப்பிங் செய்திருப்பதால், அதனை நிறைய முறை பார்த்திருப்பார். ஆனால் வைபவ் சூர்யவன்ஷி நான் பந்தை தாமதமாக வீசியதை சரியாக கணித்து மிட் ஆனில் ஒரு ரன்னை எடுத்துவிட்டார். அவர் பெரிய ஷாட்டுக்கு போவார் என்று கருதினேன். ஆனால் என்னையே மிரள வைத்துவிட்டார்.
அந்த நேரத்தில் இந்த பையன் எங்கிருந்து வந்தான் என்று தோன்றுவிட்டது. ஐபிஎல் தொடரில் 18 ஆண்டுகளுக்கு முன்பாக நான் அறிமுகமாகினேன். அவருக்கு இப்போது வெறும் 14 வயது மட்டுமே ஆகிறது. அவரின் பெற்றோர் கூட வைபவ் சூர்யவன்ஷியை நினைத்து இவ்வளவு கற்பனை செய்திருக்க மாட்டார்கள். பட்லர் கூட ஆர்ச்சரிடம் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் பற்றி பேசி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

