வாழ்வில் செய்த மிகப்பெரிய தவறு.. 2019ல் களத்திற்கு சென்று வாக்குவாதம் செய்திருக்க கூடாது.. ஒப்புக்கொண்ட தோனி

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனியை ரசிகர்கள் கேப்டன் கூல் என்று கொண்டாடி வருகின்றனர். அதற்கு எவ்வளவு பரபரப்பான நேரத்தில் தோனியின் முகத்தில் கொஞ்சம் கூட டென்ஷன் இருக்காது. எந்தவித பதற்றத்தையும் வெளிக் காட்டாமல் செய்ய வேண்டிய பணிகளில் மட்டுமே தோனி கவனம் செலுத்துவார். இதனால் அவரை ரசிகர்கள் கேப்டன் கூல் என்று கொண்டாடி வருகிறார்கள்.

- Advertisement -

ஆனாலும் களத்தில் சில நேரங்களில் தோனி வெளிப்படையாக கோபத்தை வெளிக் காட்டியுள்ளார். அதிலும் 2019ம் ஆண்டு ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது தோனி கோபமடைந்ததை யாராலும் மறக்க முடியாது. ஏனென்றால் அந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு கடைசி 3 பந்துகளில் 8 ரன்கள் தேவையாக இருக்கும். 

- Advertisement -

ஒப்புக்கொண்ட தோனி

- Advertisement -

அப்போது பவுலிங் செய்த பென் ஸ்டோக்ஸ் நோ-பால் வீசுவார். அதனை உடனடியாக லெக் அம்பயர் நோ-பால் கொடுக்க பின்னர் கள நடுவர் மாற்றம் செய்வது போல் பேசுவார்கள். இதனால் என்ன முடிவு என்பதில் சில குழப்பம் ஏற்படும். இதனால் டென்ஷனான தோனி பவுண்டரி எல்லையில் இருந்து கைகளை உயர்த்தி பேசி கொண்டே இருப்பார். 

ஒரு கட்டத்தில் திடீரென ஃபீல்டிங்கிற்குள் களமிறங்கும் தோனி, நேரடியாக நடுவர்களுடன் வாக்குவாதம் செய்வார். அந்த சம்பவம் ரசிகர்களால் இன்று வரை மறக்க முடியாது. இந்த சம்பவம் குறித்து அண்மையில் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு தோனி பேசும் போது,  ஏராளமான முறை களத்தில் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். அதிலும் ஒரு ஐபிஎல் போட்டியில் களத்திற்கு சென்று வாக்குவாதம் செய்தேன்.

- Advertisement -

மிகப்பெரிய தவறு

எனது வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறுகளில் அதுவும் ஒன்று. அதனை விடுத்து யோசித்தால், சில நேரங்களில் கோபம் வரும். ஏனென்றால் சில தருணங்கள் நம்மை எளிதாக ட்ரிக்கர் செய்துவிடும். அப்படியான விளையாட்டினை தான் நாம் ஆடுகிறோம். ஏனென்றால் ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு போட்டியையும் வெல்ல வேண்டிய தேவை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் செயலுக்கு 50 சதவிகிதம் போட்டிக்கான ஊதியத்தில் இருந்து அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல் தோனியின் அன்றைய செயலை தோனி ரசிகர்களே கடுமையாக விமர்சித்தனர். அதேபோல் அந்த செயல்பாட்டுக்கு தோனி வருத்தம் தெரிவித்திருப்பது வரவேற்பை பெற்று வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles