இதெல்லாம் தேவையில்லாத வேலை ரோகித்.. அந்த சின்ன பையன் பாவம்.. நீங்க பண்ணது எனக்கு சுத்தமா பிடிக்கல – மைக்கேல் ஹஸ்ஸி பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்தப் போட்டியின் நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 228 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்துள்ளது. இதன் மூலம் அந்த அணி 333 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. முன்னதாக 358 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்திருந்த இந்தியா இன்றைய நாள் ஆட்டம் தொடங்கியதும் 369 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

சிறப்பாக விளையாடி சதமெடுத்த நிதீஷ் குமார் ரெட்டி 114 ரன்களுக்கு அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. எனினும் அந்த அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் மார்னஸ் லபுசேன் ஆகியோர் 7வது விக்கெடிற்கு 57 ரன்கள் பார்ட்னர்ஷிப்பாக சேர்த்து ஆஸ்திரேலிய அணியை சர்விலிருந்து மீட்டனர்.

- Advertisement -

சிறப்பாக விளையாடிய லபுசேன் 70 ரன்கள் எடுத்த நிலையில் முகமது சிராஜ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். மேலும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் 41 ரன்களுக்கு அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து இறுதி விக்கெட் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்ததை தொடர்ந்து ஆஸ்திரேலியா 228 ரன்களுக்கு 9 விக்கெட்டுகள் இழந்திருக்கிறது. இன்றைய போட்டியின் போது இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் 3 கேட்ச்களை தவற விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

மேலும் சிறப்பாக விளையாடி அரை சதமெடுத்த லபுசேன் 46 ரன்களில் விளையாடிக் கொண்டிருந்தபோது அவர் கொடுத்த எளிமையான கேட்ச்சை கல்லி திசையில் ஃபீல்டிங் செய்த ஜெய்ஸ்வால் தவறவிட்டார். இதனால் கோபமடைந்த இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஆடுகளத்திலேயே தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியதோடு ஜெய்ஸ்வாலை பார்த்து முறைத்தார். இது ரசிகர்கள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

முன்னாள் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் விமர்சகர்களும் ரோகித் சர்மாவின் நடவடிக்கையை விமர்சித்திருப்பதோடு அவரது கேப்டன்சி பற்றிய கேள்வியையும் எழுப்பினர். இதுகுறித்து போட்டியின் போது நேரலையில் வர்ணனை செய்த ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்ஸி, ரோகித் சர்மா இளம் வீரரிடம்நடந்து கொண்ட விதம் தனக்கு பிடிக்கவில்லை என தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் அவரது நடவடிக்கை இளம் ஜெய்ஸ்வாலின் நம்பிக்கையை பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியாக ஹஸ்ஸி, எந்த ஒரு வீரரும் வேண்டுமென்றே கேட்சை தவறவிடுவதில்லை. பரபரப்பான போட்டிகளின் போது இது போன்ற தவறுகள் நடப்பது இயல்பான ஒன்றுதான். அந்த நேரத்தில் ரோஹித் சர்மா, ஜெஸ்வாலுக்கு ஆதரவாக இருந்திருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல் மைதானத்திலேயே அவரைத் திட்டியதும் முறைத்ததும் ஒரு நல்ல கேப்டனுக்குரிய செயல் அல்ல என தெரிவித்திருக்கிறார்.

ரோஹித் சர்மாவின் செயல் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய மகளிர் அணியின் கேப்டன் அலிசா ஹீலி, இந்திய அணியின் இளம் வீரருக்கு ரோகித் சர்மா தனது ஆதரவை தெரிவித்திருக்க வேண்டும் என கூறி இருக்கிறார். மேலும் நீங்கள் அவருடன் துவக்க வீரராக களமிறங்கும்போது அவர் ரன்கள் குவிப்பதற்கு நல்ல நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அதற்கு உங்களது ஆதரவு அவசியம் எனக் கூறியிருக்கிறார். அணியின் இளம் வீரர்கள் தவறு செய்யும் போது கேப்டன் அவர்களது தவறை சுட்டிக்காட்டுவதோடு அந்த வீரருக்கு ஆதரவாக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles