எங்கள பார்த்தா எப்படி தெரியுது.. இந்தியா தோத்தாலும் அந்த வார்த்தையை சொல்லுவீங்களா.. கடுப்பான தென்னாப்பிரிக்கா கேப்டன்.. என்ன நடந்தது.?

நடப்பு உலக கோப்பை போட்டி தொடரில் இந்திய அணிக்கு அடுத்தபடியாக தென்னாப்பிரிக்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணி விளையாடியிருக்கும் ஏழு போட்டிகளில் ஆறு வெற்றிகளுடன் அதிக நெட் ரன் ரேட் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த உலகக் கோப்பையில் வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட அணியாகவும் தென்னாபிரிக்கா திகழ்கிறது. தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் ஒருமுறை 400 ரன்களும் மூன்று முறை 350 க்கும் மேற்பட்ட ரன்களை குவித்திருக்கிறது. உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பாக ஆடி வரும் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவாலாக தென்னாப்பிரிக்கா அணி தான் இருக்கும் என கிரிக்கெட் விமர்சகர்களும் முன்னால் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இன்று கொல்கத்தாவில் நடைபெறும் போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோத இருக்கின்றன. இரண்டு அணிகளும் அரையிறுதிக்கு தகுதி பெற்று இருக்கும் நிலையில் சில கிரிக்கெட் நிபுணர்கள் இதை உலகக்கோப்பை இறுதிப்போட்டியின் முன்னோட்டமாகவும் பார்க்கின்றனர். எனினும் தென்னாப்பிரிக்க அணியை பொறுத்தவரை அவர்களை சோக்கர்ஸ் என்று அழைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. அதாவது அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி கால் இறுதி மற்றும் அரை இறுதி போன்ற நாக்கவுட் போட்டிகளில் பரிதாபமாக தோற்று வெளியேறுவார்கள். இதனைத் தான் ஆங்கிலத்தில் சோக்கர்ஸ் என்று அழைப்பார்கள்.

- Advertisement -

தென்னாபிரிக்கா அணியின் உலகக்கோப்பை வரலாற்றை எடுத்து பார்க்கும்போது சோக்கர்ஸ் என்ற இந்த வார்த்தை அவர்களுக்கு கச்சிதமாக பொருந்தும். அவர்கள் முதன்முதலாக விளையாடிய 1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இங்கிலாந்து அணி இடம் தோல்வி அடைந்து வெளியேறினர். 96 உலக கோப்பையில் கால் இறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியடைந்தது. 99 ஆம் வருட உலகக் கோப்பையில் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக செமி பைனல் போட்டியில் வெற்றி பெறும் கட்டத்தில் இருந்த சவுத் ஆப்பிரிக்கா ஆலன் டொனால்டின் கவனக்குறைவால் ரன் அவுட் ஆகி உலகக்கோப்பையில் இருந்து வெளியேறியது.

மேலும் 2011 மற்றும் 2015 உலகக் கோப்பைகளிலும் நாக்அவுட் சுற்றுக்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அந்த அணியால் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியவில்லை. இதனால்தான் அவர்களை சோக்கர்ஸ் என்றும் அதிர்ஷ்டம் இல்லாத அணி என்றும் கிரிக்கெட் விமர்சகர்களும் கிரிக்கெட் ரசிகர்களும் அழைத்து வருகின்றனர். நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பின்போது இதுகுறித்து தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமாவிடம் கேட்கப்பட்டது. இந்தக் கேள்வியால் கடும் கோபம் அடைந்த அவர் கடுமையான பதில் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பத்திரிக்கையாளரின் கேள்விக்கு பதில் அளித்த பாவமா ” நாங்கள் சோக் செய்ய வந்திருக்கிறோமா.? இந்தக் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது என்று எங்களுக்கு தெரியவில்லை. எங்கள் அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் எங்களை சோக்கர்ஸ் என்று அழைக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். ஒருவேளை இந்தியா தோல்வி அடைந்தால் அவர்களை சோக்கர்ஸ் என்று அழைப்பீர்களா.? என கோபத்துடன் பதிலளித்தார் .

மேலும் இது குறித்து தொடர்ந்து பேசிய அவர் ” இரண்டு பலமான அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் எந்த அணி முதலில் ஆட்டத்தின் சூழ்நிலைகளை அறிந்து ஆதிக்கம் செலுத்த துவங்குகிறதோ அந்த அணியின் கை முன்னேறும். உலகக் கோப்பை என்றால் அழுத்தமான தருணங்கள் இருக்கும். அவற்றைக் கடந்து தான் நாங்கள் இன்று இரண்டாவது இடத்தில் இருக்கிறோம் . இன்னும் கடக்க வேண்டிய தூரம் இருக்கிறது. அதையும் எங்களால் சிறப்பாக செய்ய முடியும். ஆனால் இது போன்ற வார்த்தைகள் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை” என்று கோபத்துடன் கூறி முடித்தார் பாவமா.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles