“இன்னைக்கு நான் கொஞ்சம் ஸ்லோவா ஆட அவர்தான் காரணம்” – 49-வது செஞ்சுரிக்கு பின் விராட் கோலி பேட்டி.!

நடப்பு உலக கோப்பையில் இன்று நடைபெற்ற 37 வது போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங் தேர்வு செய்தார் . இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

சிறப்பாகவும் அதிரடியாகவும் விளையாடிய ரோகித் சர்மா 24 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து கில் 23 ரன்னில் அவுட் ஆனார். இந்நிலையில் விராட் கோலி உடன் ஜோடி சேர்ந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு நல்ல அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது. மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக இவர்கள் இருவரும் இணைந்து 134 ரன்கள் சேர்த்து நிலையில் 87 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 7 பௌண்டரிகளுடன் 77 ரன்கள் எடுத்த ஸ்ரேயாஸ் ஐயர் அவுட் ஆனார். ஸ்ரேயாஸ் ஐயருக்கு பின் களம் இறங்கிய கேஎல் ராகுல் 8 ரன்னில் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய சூரியகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

ஒரு முனையில் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி அவரது 35 வது பிறந்த நாளான இன்று ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் தனது 49 ஆவது சதத்தை நிறைவு செய்தார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் போட்டிகளில் எடுக்கப்பட்ட அதிக சதங்கள் என்ற சாதனையையும் சமன் செய்திருக்கிறார். இறுதிவரை ஆட்டம் விளக்காமல் விளையாடிய விராட் கோலி 121 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இறுதியில் வந்து அதிரடி நிகழ்த்திய ரவீந்திர ஜடேஜா 15 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 29 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார்.

- Advertisement -

இவர்கள் இருவரது சிறப்பான ஆட்டத்தால் இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 326 ரன்கள் குவித்து இருக்கிறது. தென்னாபிரிக்கா அணியின் பந்துவீச்சில் இங்கிடி, யான்சன், ரபாடா, கேசவ் மகராஜ் மற்றும் சம்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணிக்கு 326 ரன்கள் வெற்றிலக்காக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றால் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறும்.

முதலாவது இன்னிங்ஸ் முடிவிற்கு பிறகு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி நெறியாளர்களிடம் பேசிய விராட் கோலி ” ஈடன் கார்டன்ஸ் மைதானத்தின் ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு மிகவும் கடினமான ஒன்று. இந்திய அணிக்கு ரோகித் சர்மா மற்றும் கில் ஆகியோர் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். அணியின் அடித்தளத்தை பயன்படுத்தி அதற்கு ஏற்றார் போல் விளையாட வேண்டியது எனது பொறுப்பு. ஆனால் ஆடுகளம் மெதுவாகி வந்து சுழல ஆரம்பித்தால் இறுதி வரை நின்று விளையாட வேண்டும் என்பது அணி நிர்வாகம் எனக்கு ஒதுக்கிய ரோல். அதன்படி இறுதிவரை நின்று இந்தியா ஒரு நல்ல ஸ்கோர் எட்ட உதவி இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் நாங்கள் இறுதியில் அதிக ரன்கள் சேர்க்க முடிந்தது. மூன்றாவது மற்றும் நான்காவது விக்கெட் இணைந்து ஏற்படுத்தும் பார்ட்னர்ஷிப் அணிக்கு எவ்வளவு முக்கியமானது என்று ஆசிய கோப்பை போட்டியின் போது நிறைய பேசியிருக்கிறோம். ஹர்திக் பாண்டியா அணியில் இல்லாததால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்தால் அணிக்கு சிக்கல் ஏற்படும். இதனை உணர்ந்து கடைசி வரை பொறுப்புடன் ஆட வேண்டி இருந்தது .

இந்திய அணிக்காக சிறப்பாக பல தருணங்களில் விளையாடி அணியின் வெற்றிக்கு பங்களிக்க வாய்ப்பு வழங்கியதற்கு இறைவனுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். எனது பிறந்த நாளான இன்று ஏராளமான ரசிகர்கள் முன்பு சிறப்புமிக்க ஒரு மைதானத்தில் என்னுடைய 49 ஆவது சதத்தை எட்டியது மிகவும் மகிழ்ச்சியான ஒன்று. இந்த ஆடுகளம் மெதுவாக இருக்கிறது. மேலும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு நல்ல டர்ன் கிடைக்கிறது . இந்திய அணியின் பவுலிங் தரம் சிறப்பாக இருப்பதால் வெற்றி பெறுவோம். எனினும் இந்த வெற்றிக்கு கடுமையாக போராட வேண்டி இருக்கும். விக்கெட்டுகள் எடுப்பது மிகவும் அவசியம். ஆரம்பத்தில் சில விக்கெட்டுகள் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவோம் என கூறி முடித்தார் விராட் கோலி.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles