அடிச்சு சொல்றேன்.. சுப்மான் கில்தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா வருவார்.. கோப்பையை வெல்ல இந்த 2 அணிகளுக்கு வாய்ப்பு அதிகம் – ஹாசிம் அம்லா

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் மூன்றாவது போட்டி வருகிற இரண்டாம் தேதி நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹாசிம் அம்லா கோப்பையை வெல்லக்கூடிய இரண்டு அணிகள் குறித்து சில முக்கியமான கருத்துக்களை பேசியிருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 6 முக்கிய வீரர்கள் இல்லாத போதிலும், ஆஸ்திரேலியா அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளதால் இப்போது கணிப்புகள் சற்று மாறி இருக்கிறது. மேலும் முதல் போட்டியில் நியூசிலாந்து அணியும், பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தத் தொடரில் தற்போது முன்னணியில் இருக்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை வரிசையாக பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் என இரண்டு அணிகளை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணியைப் பொறுத்தவரை விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு அடுத்தபடியாக சுப்மான் கில் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக தெரிகிறார். இந்த சூழ்நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹசிம் ஆம்லா இந்திய அணி வீரர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் வீரராக வருவதற்கு அதிகமான வாய்ப்புகள் இருக்கிறது எனவும், சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வெல்லக்கூடிய இரண்டு அணிகளில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் ஆகியவை இருப்பதாக சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

இதுகுறித்து அம்லா விரிவாக கூறும்போது “இந்திய அணியைப் பொறுத்தவரை கில் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவர் சூப்பர் ஸ்டார் வீரராக திகழ்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்திய அணியில் கில் போல தென்னாபிரிக்கா அணியில் ரியான் ரிக்கல்டன் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் சற்று தாமதமாக செயல்பட ஆரம்பித்திருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:ஐபிஎல் இருக்கட்டும் தம்பிகளா.. ரெட் பால் கிரிக்கெட் ரொம்ப முக்கியம்.. இங்கிலாந்து தொடருக்காக பிசிசிஐ போட்ட பிளான்

ஒவ்வொரு நாட்டிலும் ஒரு குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் இரண்டு முதல் மூன்று சிறந்த வீரர்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இந்த நிலையில் கில் அடுத்த சிறந்த வீரராக உருவாவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது. கில் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை தருகிறார்கள். அவர்களுக்குப் பிறகு விராட் கோலி வருகிறார். எனவே இந்திய அணி கோப்பையை வெல்ல வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. மேலும் இந்திய அணிக்கு பிறகு தென் ஆப்பிரிக்க அணியும் வலுவாக இருப்பதால் கோப்பையை வெல்வதற்கு இந்த இரண்டு அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளது” என கூறி இருக்கிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles