கெட்ட வார்த்தையில் திட்டிய பாண்டியா.. பரபரப்பான போட்டி இடையே மோதல் – நடந்தது பற்றி சாய் கிஷோர் பேச்சு

நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் அணியிடம் 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 197 ரன்கள் என்ற இலக்கை துரத்திய மும்பை அணி, 20 ஓவர்களில் 160/6 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தனது இரண்டாவது தோல்வியை சந்தித்தது. இன்னும் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்யாததால் ரசிகர்கள் ஏமாற்றத்தில் மூழ்கியுள்ளனர்.

- Advertisement -

இரண்டாவது இன்னிங்ஸில் மும்பையின் பரபரப்பான 15வது ஓவரில், குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர், மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு வீசிய பந்து டாட் பால் ஆனது. பின்னர் அவரை கூர்ந்து பார்த்தார். இது பாண்டியாவை சீண்டியதால், அவர் கோபமாக தகாத வார்த்தையில் கத்தி கிஷோரை நோக்கி நடந்தார். இருவரும் மைதானத்தின் நடுவே முறைத்துக் கொண்டதால், நடுவர்கள் தலையிட வேண்டிய சூழல் உருவானது.

- Advertisement -

ஆனால் போட்டி முடிந்த பிறகு, கைகுலுக்கல் சமயத்தில் இருவரும் சிரித்து, கட்டிப்பிடித்து சமாதானமாகினர். ஹர்திக் பாண்டியாவும் சாய் கிஷோரும் முன்னதாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் ஒன்றாக விளையாடியவர்கள். இருவருக்கும் இடையே ஒரு சிறப்பு பிணைப்பு உள்ளது. போட்டிக்கு பிந்தைய பேட்டியில், சாய் கிஷோர், ” ஹர்திக் பாண்டியா என்னுடைய நல்ல நண்பர். மைதானத்தில் யாராக இருந்தாலும் போட்டியாளர் தான், தனிப்பட்ட முறையில் நாங்கள் எதையும் எடுத்துக் கொள்வதில்லை. போட்டி மனப்பான்மையுடன் விளையாடுவதே ஆட்டத்தின் அழகு. ” என்று கூறினார்.

- Advertisement -

பலமான பேட்டிங் கொண்ட மும்பை இந்தியன்ஸ் அணி, டெத் ஓவர்களில் குஜராத் அணியின் சிறப்பான பந்து வீச்சைத் தாக்கு பிடிக்கத் திணறியது. குறிப்பாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 17 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. டெத் ஓவர்களில் பிரசித் கிருஷ்ணா (2/18) சிறப்பான பந்துவீச்சு அணியின் வெற்றியை உறுதிச் செய்த கிருஷ்ணா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். அடுத்தப் போட்டியில் மும்பை அணி வான்கடே மைதானத்தில் விளையாடுவதால், கட்டாயம் வெற்றிப்பெற வேண்டிய அழுத்தம் நிறைந்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles