வேகம் உதவாது கம்பீர்.. உங்க பசங்க கிட்ட சொல்லி இதை மாத்துங்க.. இல்லனா நிலைமை கஷ்டமாயிடும் – ஹர்பஜன் சிங் அறிவுரை

நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் ஒரு போட்டியில் 300 ரன்னை எடுக்கக்கூடிய அணியாக இந்திய அணி இருக்கும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தார்கள். அந்த அளவிற்கு இந்திய அணியின் டி20 கிரிக்கெட் பேட்டிங் அணுகுமுறை அதிரடியாக இருந்து வந்திருக்கிறது. இந்த நிலையில் நேற்று அமெரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி அதிரடியாக விளையாட முயற்சி செய்து 77 ரன்னுக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்தது. ஒரு பேட்ஸ்மேன் கூட நிதானம் காட்ட முயற்சி செய்யவே இல்லை.

- Advertisement -

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும் பொழுது ” கம்பீர் பயிற்சியில் இந்திய டி20 அணி அதிரடியாக விளையாடுவதை தங்களது அணுகுமுறையாக வைத்திருக்கிறது. ஆனால் நீங்கள் முதல் நான்கு விக்கெட்டுகளை வேகமாக இழக்கும் பொழுது அடுத்து வரக்கூடியவர்கள் கொஞ்சம் பொறுமையாக விளையாடுவதில் தவறு கிடையாது. ரிங்கு சிங் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் கொஞ்சம் பொறுப்பு எடுத்து பார்ட்னர்ஷிப் உருவாக்கி விளையாடியிருக்கலாம்”

- Advertisement -

“அதே சமயத்தில் கேப்டன் சூரியகுமார் யாதவ் மிக முக்கியமான போட்டியில் விளையாடிய விதத்திற்கு நாம் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். இல்லையென்றால் அமெரிக்க அணி நம்மை அப்செட் செய்திருக்கும். அவர் தன்னுடைய முதல் 30 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார் என்று நினைக்கிறேன். ஆனால் அடுத்த 19 பந்துகளில் அவர் அரை சதத்தை அடித்து விட்டார். இது அவர் எப்படிப்பட்ட திறமையை வைத்திருக்கிறார்” என்று காட்டுகிறது என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles