இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி தனது திறமையை மீண்டும் நிரூபித்து இருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் கௌதம் கம்பீர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு செய்வது முற்றிலும் நியாயம் இல்லாத செயல் என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சில முக்கியமான கருத்துக்களை பேசி இருக்கிறார்.
முதல் போட்டியில் விராட் கோலி காயம் காரணமாக விளையாடாமல் போக, அவருக்கு பதிலாகவே ஸ்ரேயாஸ் ஐயருக்கு வாய்ப்பு கிடைத்தது என்று முதலாவது ஒரு நாள் போட்டி முடிவடைந்த பிறகு ஸ்ரேயாஸ் ஐயரே நேரடியாக தெரிவித்தார். அந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஐயர் 36 பந்துகளில் 59 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் ஏற்கனவே விளையாடி தனது திறமையை நிரூபித்த ஒரு வீரருக்கு எப்படி வாய்ப்புகள் வழங்காமல் விட முடியும் இது எந்த வகையில் நியாயம் என்று இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சில முக்கியமான கருத்துக்களை பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” ஸ்ரேயாஸ் அய்யர் தன்னை ஏற்கனவே நிரூபித்த வீரராக இருக்கிறார். உலக கோப்பையிலும் அவர் தனது திறமையை நிரூபித்து ரன்கள் எடுத்த நிலையில், நியாயமாகவே அவர் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்பக்கூடிய நிலையில் இருக்கிறார். அவர் தற்பொழுது மிகச் சிறந்த நிலையில் இருக்கிறார். எனவே கடவுளும் அவருக்கு அதைத்தான் நினைப்பார்.
இதையும் படிங்க:ராகுல் நீங்க செஞ்சது தப்பு… எப்போதும் டீம் தான் முக்கியம்… சுனில் கவாஸ்கர் காட்டமான விமர்சனம்
யாரும் நினைக்காத ஒன்றை ஸ்ரேயாஸ் ஐயருக்கு மற்றவர்கள் நினைத்தார்கள் என்பது தான் உண்மை. அவருக்கு வாய்ப்பு தரக்கூடாது என்று நினைத்தார்கள். ஆனால் இப்போது ஸ்ரேயாஸ் திறமையாக விளையாடி தன்னை நிரூபித்து விட்டார். அவர் போட்டியை ஒருதலை பட்சமாக மாற்றி அதிரடியாக விளையாடிவிட்டார். ரிஷப் பண்ட் திறமையான வீரர் என்பதில் சந்தேகம் கிடையாது. ஆனால் கேஎல் ராகுல் தற்போது முன்னணியில் இருக்கும் போது ரிஷப் பண்ட் கொஞ்சம் வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டும். மேலும் விக்கெட் கீப்பர்கள் வரிசையில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜூரேல் ஆகியோர் காத்திருக்கிறார்கள். இருப்பினும் தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அணி சிறப்பாக செயல்படும் என்று நம்புகிறேன். ரிஷப் பண்ட்டை பொறுத்தவரை அவர் இன்று அல்லது நாளை அல்லது எப்போதாவது நிச்சயம் ப்ளெயிங் லெவனில் இருக்கக்கூடிய ஒரு வீரர்” என்று கூறி இருக்கிறார்.

