பாகிஸ்தானை சும்மா ஜெயிக்கலாம்.. நான் சொல்ற இந்த மாதிரி உஸ்மான் தாரிக் பவுலிங்ல் ஆடுங்க – ஹர்பஜன் சிங் அறிவுரை

நாளை இந்தியா பாகிஸ்தான் அணிகள் டி20 உலகக் கோப்பை தொடரில் மோதிக்கொள்ள இருக்கின்றன. இந்திய அணிக்கு எதிராக விளையாட மாட்டோம் என பாகிஸ்தான் அடம்பிடித்து திரும்பி வந்ததாலும், பாகிஸ்தான் அணியில் தற்போது மர்மசுழல் பந்துவீச்சாளராக உஸ்மான் தாரிக் விஸ்வரூபம் எடுத்திருப்பதாலும் இந்த போட்டிக்கு பெரிய எதிர்பார்ப்புகள் உருவாகியுள்ளது. மேலும் இலங்கையின் பெரிய மைதானங்களில் விளையாடுவதற்கு ஏற்ற வகையில் பாகிஸ்தானின் பேட்டிங் மற்றும் பௌலிங் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரையில் பேட்டிங் அணுகுமுறையை மெதுவாக மாற்றிக் கொள்ளாது. அவர்கள் தொடர்ந்து அதிரடியாகவே விளையாடுவார்கள். அதே சமயத்தில் பவுலிங் யூனிட்டில் குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் மீண்டும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் பெரிய மைதானங்களுக்கு ஏற்ற வகையில் இந்திய பவுலிங் யூனிட் மாற்றி அமைக்கப்படும். இந்த நிலையில் உஸ்மான் தாரிக் பந்துவீச்சில் எப்படி விளையாட வேண்டும்? என ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசும் பொழுது “பாகிஸ்தானின் உஸ்மான் தாரிக் நல்ல சுழல் பந்துவீச்சாளர். அவருக்கு எதிராக விளையாடும் பொழுது பாதுகாப்பாக விளையாட வேண்டும். அதே சமயத்தில் இந்திய அணி மிகச் சிறந்த அணி. அவர்கள் எப்போதும் விளையாடுவது போல இயல்பாக விளையாடுவார்கள். இந்த போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை எளிதாக வெல்லும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles