மும்பை அணி ரோஹித்தை வெளியே அனுப்பிடும்.. ஏலத்தில் அவரை யாரு எடுப்பாங்கனு நான் சொல்றேன் கேளுங்க.. ஹர்பஜன் சிங் தகவல் !

சுவாரசியமான புதிய விதிகளுடன் கூடிய 2025 ஐ.பி.எல் ஏலம் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. இந்த மெகா ஏலத்தில் ஐந்து முறை கேப்டனாக சாம்பியன் பட்டம் வென்ற ரோஹித் ஷர்மா ஏலத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து முன்னாள் மும்பை வீரர் ஹர்பஜன் சிங் பேசியுள்ளார்.

- Advertisement -

இந்த ஆண்டு 5 வீரர்களை தக்க வைத்தால் 75 கோடிகள் காலி ஆகிவிடும். இதனால் பெரும்பாலான அணிகள் 3 வீரர்களைத் தக்க வைத்துக் கொண்டு 3 ஆர்.டி.எம் கார்டுகளுடன் வருவதே புத்திசாலி தனம் என கிரிக்கெட் வல்லுனர்கள் கூறுகிறார்கள். மும்பை அணியில் இந்திய நட்சத்திர வீரர்கள் குவிந்துள்ளனர். யாரைத் தக்க வைப்பது என்பதில் அவர்களுக்கு பெரிய தலை வலி.

- Advertisement -

கணிப்புகளின் படி பும்ரா 18 கோடிகளும், ஹர்திக் 14 கோடிகளும், சூரியகுமார் யாதவ் 11 கோடிகளுக்கும் தக்க வைத்துக் கொல்லப்படுவார்கள். அன்காப்டு வீரர்கள் பிரிவில் ஆகாஷ் மத்வால் 4 கோடிகளுக்கு தக்க வைத்துக் கொள்ள வாய்ப்புண்டு. இது தவிர மும்பை அணியில் இஷான் கிஷன், ரோஹித் ஷர்மா, டிலக் வர்மா ஆகிய பெரிய வீரர்களில் இருவரை ஆர்.டி.எம் கார்டு மூலம் மீண்டும் எடுக்க மும்பை அணி முயற்சி செய்யலாம்.

- Advertisement -

கடந்த ஆண்டு கடைசி நேரத்தில் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியில் இருந்து மீண்டும் மும்பை அணிக்கு டிரேட் செய்யப்பட்டார். அவர் கேட்டபடியே கேப்டன் பதவியையும் மும்பை அணி ரோஹித்திடம் இருந்து வாங்கி பாண்டியாவுக்குத் தந்தது. மும்பை அணியின் முகமாக விளங்கி ஐந்து கோப்பைகளை வென்று தந்த ரோஹித்திடம் இது குறித்து எந்த ஒரு வார்த்தையும் கலந்து உரையாடாமால் கேப்டன்சியை பறித்தது பெரிய சிக்கலை அணியில் உருவாக்கியது. இதனால் மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களும் வெறுப்பில் கொந்தளித்தனர்.

இதன் காரணமாக ரோஹித் ஷர்மா அணியை விட்டு வெளியே வந்து வேறொரு அணியில் கேப்டனாக செயல்படுவார் என எதிர்பார்ப்புகள் உள்ளன. அவரை வாங்க ஒரு சில அணிகள் கடந்த ஆண்டே முயற்சியும் செய்தது. இந்த ஆண்டு நடந்த டி20ஐ உலகக் கோப்பையையும் வென்று பெரிய மரியாதையை பெற்றுள்ள ரோஹித் ஷர்மா, பேட்டிங்கிலும் கூடுதல் அதிரடியைக் கையில் எடுத்துள்ளதால் அவருக்கு பெரிய டிமாண்ட் இருக்கும்.

- Advertisement -

ரோஹித் இம்முறை ஏலத்திற்கு வந்தால் என்ன நடக்கும் என்பது குறித்து ஹர்பஜன் சிங் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, ” ரோஹித் ஷர்மா இந்த ஆண்டு மும்பை அணியால் தக்க வைத்துக் கொள்ளபடுவாரா என்பதைப் பார்பதற்கு ஆவலாக உள்ளன. அவரை ஒன்று, இரண்டு என குறிப்பிட்ட அணிகள் மட்டுமில்லாமல் பலர் அவரை வாங்க அடித்துக் கொள்வர். அதனைக் காண இன்னும் சுவாரசியமாக இருக்கும். “

” ரோஹித் ஷர்மா நிரூபிக்கப்பட்ட வீரர். ஒரு பேட்ஸ்மேனைத் தாண்டி சிறப்பாக கேப்டனாக விளங்குகிறார். அவருக்கு 37 வயது ஆனாலும் கூட இன்னுமும் அவருக்குள் பல ஆண்டு கிரிக்கெட் நிறைந்துள்ளது. ரோஹித் ஷர்மா மெகா ஏலத்திற்கு வந்தால் முக்கியப் புள்ளியாக இருப்பார். ” என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles