ஒவ்வொரு ஆண்டும் ஐ.பி.எல் தொடங்கும்போது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் எம்.எஸ்.தோனி ரசிகர்கள் பட்டாளம் செல்லும் இடமெல்லாம் திரண்டு இருக்கும். ஐந்து முறை கோப்பை வென்ற தோனி, கடந்த சில ஆண்டுகளாக ஐ.பி.எலில் மட்டுமே விளையாடுகிறார். ஒவ்வொரு சீசன் முடிவிலும் அவரது ஓய்வு பற்றிய செய்திகள் வந்தாலும், அவை இறுதியில் வதங்தியாக முடிந்துவிடுகிறது. ரசிகர்களும் அவர் தொடர்ந்து விளையாட வேண்டுமென ஆசைப்படுவதால், அவரும் தொடர்ந்து விளையாடி வருகிறார்.
ஆனால் இந்த ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்டிங் படு மோசமாக இருப்பதால் தொடர்ந்து மூன்று தோல்விகளைச் சந்தித்து ரசிகர்களை ஏமாற்றத்திற்குள் ஆழ்த்தியுள்ளது. பெங்களூருக்கு எதிரான போட்டியில், தோனி 9-வது இடத்தில் பேட்டிங்கிற்கு வந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிராக, 184 ரன்கள் துரத்திய போட்டியில், 11-வது ஓவரில் களமிறங்கி 30 ரன்கள் மட்டுமே எடுத்து வெற்றியைத் தேடித்தர முடியவில்லை. தேவைப்படும் நேரத்தில் தோனி பேட்டிங் வராமல் இருப்பது கடுப்பை உண்டாக்கியுள்ளது. இதனால், தற்போது பல ரசிகர்கள் அவரை ஓய்வுப் பெறுமாரு மீடியாவில் பேசி அதிருப்த்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இதனைப் பற்றி தோனி பேசி இருப்பதாவது, ” நான் ஓய்வு முடிவு குறித்து இப்போது யோசிக்கவில்லை. வருடத்திற்கு இருமுறை மட்டுமே விளையாடுகிறேன். வரும் ஜூலை மாதம் 44 வயதாகிவிடும். ஒவ்வொரு ஆண்டும் நான் விளையாடுவேனா இல்லையா என்பதைப் பற்றி முடிவெடுக்க எனக்கு 10 மாதங்கள் நேரம் இருக்கும். உடல் நிலையைப் பொறுத்து தான் எல்லாமே முடிவு செய்வேன்,” என்றார் தோனி.
2023 கோப்பை வென்ற தோனி, அப்போதே ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. பின்னர், சென்னை அணியின் புதிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட்க்கு துணையாக ஓராண்டு விளையாடி ஓய்வு பெறுவார் எனத் தெரிந்தது. ஆனால் தோனி நல்ல உடல் தகுதியில் சிறப்பான பார்மில் இருந்ததால் விளையாடுவதைத் தொடர்ந்தார். எதுவானாலும் அளவுக்கு மிஞ்சினால் சரியாக இருக்காது என்பதற்கு இணங்க, இந்த ஆண்டு தோனி பேட்டிங் வெறுப்பைக் கொண்டு வந்துள்ளது. காயம் காரணமாக தோனி மிகவும் கீழே வந்து விளையாடுவதற்கு பதிலாக ஓய்வு பெறுவது சரியா இருக்கும் என ரசிகர்களே நினைக்கும் நிலை வந்துவிட்டது. ஆனால் தோனி பேசியதைப் பார்க்கையில், மேலும் விளையாடுவார் எனத் தெரிகிறது.

