ஆர்சிபி எடுத்த அந்த வீரரை டம்மின்னு நினைக்கிறீங்க.. யூடியூப் போய் பாருங்க யாருன்னு தெரியும்.. சும்மா அதிரும் – பில் சால்ட் பேட்டி

2025-ம் வருட ஐபிஎல் தொடருக்கான ஏலம் கடந்த நவம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் பல்வேறு புதிய வீரர்கள் அணிகளால் வாங்கப்பட்டுள்ளனர். உள்நாட்டு வீரர்கள் தவிர வெளிநாட்டு புதுமுக வீரர்களும் ஐபிஎல் அணிகளில் இடம் பெற்றுள்ளனர். இது தொடர்பாக கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் நிபுணர்களிடயே ஆதரவான கருத்துக்களும் விமர்சனங்களும் எழுந்திருக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இங்கிலாந்தைச் சேர்ந்த 21 வயது இளம் ஆல் ரவுண்டரை ஏலத்தில் எடுத்தது. இது தொடர்பாக பல்வேறு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் விமர்சனம் செய்து வந்தனர். டம்மி வீரருக்கு 2.6 கோடி ரூபாய் கொடுத்து ஆர்சிபி வாங்கி இருக்கிறது என தெரிவித்திருந்தனர். இது தொடர்பான விமர்சனங்களுக்கு இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் பிலிப் சால்ட் தனது பேட்டியின் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடர் ஆரம்பித்த நாள் முதல் இதுவரை ஆர்சிபி அணி ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வென்றதில்லை. இதன் காரணமாக 2025 ஆம் வருடம் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற கனவுடன் இந்த வருடம் நடைபெற்ற வீரர்கள் ஏலத்தை சந்தித்தது. மேலும் ஏலத்திற்கு முன்பாக அந்த அணியின் முக்கிய வீரர்களான முகமது சிராஜ், மேக்ஸ்வெல் மற்றும் டுப்ளசிஸ் போன்றவர்களும் அணியிலிருந்து ரிலீஸ் செய்யப்பட்டனர்.

- Advertisement -

மேலும் இந்த வருட ஏலத்தை மிகவும் கவனத்துடன் கையாண்ட ஆர்சிபி நிர்வாகம் தங்களது திட்டத்தின்படி பல வீரர்களை எடுத்திருக்கிறது. மேலும் இந்த ஏலத்தில் இங்கிலாந்து அணியின் 3 வீரர்களையும் ஆர்சிபி நிர்வாகம் விலைக்கு வாங்கியிருக்கிறது. இவர்களில் லியாம் லிவிங்ஸ்டன் மற்றும் பிலிப் சால்ட் ஆகியோர் அனைவருக்கும் பரிச்சயமான வீரர்கள். இவர்களைத் தொடர்ந்து மூன்றாவதாக வாங்கப்பட்ட ஜேக்கப் பெத்தேல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தற்போது தான் விளையாட தொடங்கி இருக்கிறார். இவரை 2.6 கோடி ரூபாய்க்கு ஆர்சிபி அணி வாங்கியது கிரிக்கெட் நிபுணர்களிடமும் ரசிகர்களிடமும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக இங்கிலாந்து அணியின் முன்னணி வீரரும் தற்போது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாட இருப்பவருமான பிலிப் சால்ட் பதிலடி கொடுத்திருக்கிறார். இது தொடர்பாக இஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் பேசியிருக்கும் அவர், ஜேக்கப் பெத்தேல் மிகவும் துடிப்பு மிக்க இளம் ஆல் ரவுண்டர் என தெரிவித்திருக்கிறார். மேலும் யூடியூப் வீடியோக்களை பார்த்து அவரது ஆட்டம் எப்படிப்பட்டது என்பதையும் தெரிந்து கொள்ளலாம் எனவும் கூறி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் இங்கிலாந்து உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பெத்தேல் ஐபிஎல் தொடரிலும் தனது முத்திரையை பதிப்பார் எனவும் கூறி இருக்கிறார். மிகவும் திறமையான வீரரான அவர் போட்டியை சரியாக கனித்து விளையாடக்கூடிய இளம் வீரர் எனவும் தெரிவித்திருக்கிறார். அவரிடம் இருக்கும் சில திறமைகள் சர்வதேச கிரிக்கெட்டில் இருக்கும் வீரர்களிடம் கூட கண்டதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்காக, ஆஸ்திரேலியஅணிக்கு எதிரான டி20 மற்றும் ஒரு நாள் போட்டி தொடரில் அறிமுகமான ஜேக்கப் பெத்தேல் அதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்ற தொடரிலும் விளையாடினார். தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியிலும் அறிமுக வீரராக இவர் களமிறங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles