டிராவிட், ரவி சாஸ்திரி செய்யாத விஷயம்.. இந்திய கிரிக்கெட்டுக்காக கம்பீர் எடுத்த முடிவு.. இங்கிலாந்து தொடருக்கு முன் அதிரடி

சமீபத்தில் நடந்து முடிந்த 2025 ஆம் வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை கைப்பற்றியது. இதனைத் தொடர்ந்து நாடு திரும்பிய இந்திய அணியின் வீரர்கள் அடுத்த வாரம் தொடங்கயிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக தயாராகி வருகிறார்கள்.

- Advertisement -

ஐபிஎல் போட்டிகளை தொடர்ந்து இந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இந்தப் போட்டி தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு பிறகு நடக்க இருக்கிறது. கடந்த 2 சாம்பியன்ஷிப் தொடர்களிலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணி 2023-25 சீசனில் பெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.

- Advertisement -

நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுடனான டெஸ்ட் தொடர் தோல்விகளை தொடர்ந்து இந்திய அணியின் சிவப்பு பந்து ஆட்டம் குறித்த கேள்வி பலருக்கும் எழுந்திருக்கிறது. மேலும் டெஸ்ட் தொடரின் பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்பாடுகள் குறித்த சந்தேகமும் கிரிக்கெட் விமர்சகர்கள் பலருக்கும் ஏற்பட்டது. இந்த சந்தேகங்களை நீக்கி இந்திய அணியை மீண்டும் டெஸ்ட் தொடர்களில் வெற்றியை நோக்கி நகர்த்த பயிற்சியாளர் கம்பீர் பல அதிரடி முடிவுகளை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்திய சீனியர் அணியின் இங்கிலாந்து பயணத்திற்கு முன்பாக இந்தியா ஏ அணி இங்கிலாந்திற்கு சென்று முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. அந்த அணிக்கு பயிற்சியாளராக கௌதம் கம்பீர் இங்கிலாந்து செல்ல இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அணிக்கான வருங்கால டெஸ்ட் வீரர்களை அடையாளம் காணவும் இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரை வெல்வதற்கான முயற்சிகளை எடுக்கவும் கௌதம் கம்பீர் ஏ அணியுடன் இங்கிலாந்து செல்ல இருப்பதாக டைம்ஸ் நவ் நிறுவனம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

கம்பீருக்கு முன் இந்திய அணியின் பயிற்சியாளர்களாக செயல்பட்ட ராகுல் டிராவிட் மற்றும் ரவி சாஸ்திரி போன்றோர் இந்திய ஏ அணிக்கு பயிற்சியாளராக சென்றதில்லை. மேலும் இந்திய சீனியர் அணி போட்டிகளில் பங்கேற்காத காலங்களில் பயிற்சியாளர்கள் ஓய்வெடுத்து வந்தனர். தற்போது தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றிருக்கும் கௌதம் கம்பீர் இந்திய டெஸ்ட் அணியின் தரத்தை மேம்படுத்துவதற்காக இந்தியா ஏ அணியுடன் இங்கிலாந்து செல்வதற்கு பிசிசிஐ நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

- Advertisement -

இந்திய அணியின் சீனியர் வீரர்கள் பலரும் ஓய்வை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் வருங்கால டெஸ்ட் அணிக்காக இளம் வீரர்களை தேர்வு செய்து வலிமையான இந்திய அணியை கட்டமைக்கவும் தற்போது தொடங்கயிருக்கும் புதிய டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இந்திய அணியின் செயல்பாடுகளை மேம்படுத்தவும் இந்தியா ஏ அணியுடன் கௌதம் கம்பீர் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்து இருப்பதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இந்தியா ஏ அணிக்கு அதிகப்படியான வெளிநாட்டு கிரிக்கெட் தொடர்ககளை ஏற்பாடு செய்யும்படி பிசிசிஐ நிர்வாகத்திடம் கௌதம் கம்பீர் ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ராகுல் டிராவிட் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக இருந்தபோது இந்தியா ஏ அணிக்கு அதிகப்படியான வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles