அடிச்சி சொல்றேன்.. ஏப்ரல் 17 இந்த டீமை போட்டு நொறுக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 300 ரன்கள் சாதனைப் படைக்கும் – டேல் ஸ்டெயின் அதிரடிக் கணிப்பு

கிரிக்கெட் உலகில் அதிரடி ஆட்டத்திற்கு பெயர் பெற்ற ஐபிஎல் தொடர், ஒவ்வொரு ஆண்டும் புதிய உயரங்களைத் தொடுகிறது. டி20 கிரிக்கெட்டில் பேட்டிங்கில் முழுக்க முழுக்க அதிரடி மட்டுமே காட்டி ஸ்கோரை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றது இந்தத் தொடர். இதற்க்கு விதைப் போட்டது சன்ரைசார்ஸ் ஹைதராபாத். கடந்த ஆண்டு 287 வரை அடித்த ஹைதராபாத், 300 ரன்களை எட்ட வேண்டும் என்ற நோக்கில் இருப்பதை கடந்த ஆண்டே மீடியாவில் தெரிவித்தது.

- Advertisement -

இதுப் பற்றி முன்னாள் ஹைதராபாத் பவுலிங் பயிற்சியாளர் மற்றும் தென்னாப்பிரிக்க வீரரான டேல் ஸ்டெய்ன் ஒரு துணிச்சலான கணிப்பை வெளியிட்டுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஒரு அணி 300 ரன்களைக் குவிக்கும் என்றும், அதை நாம் வரும் ஏப்ரல் 17 அன்று காணலாம் என்றும் அவர் நம்புகிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் சமீபத்திய அதிரடி ஆட்டத்தைப் பார்த்த பிறகு, அவரது இந்தக் கணிப்பு வெறும் கனவாகத் தோன்றவில்லை.

- Advertisement -

இந்த ஆண்டு ஹைதராபாத் தன் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸை 44 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இஷான் கிஷன் அதிரடி சதம், ட்ராவிஸ் ஹெட் அரை சதம் மற்றும் அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, ஹென்ரிக் கிளாசென் ஆகியோரின் விரைவான ஆட்டமும் சேர்ந்து, சன்ரைசர்ஸ் அணி 286/6 என்ற பிரம்மாண்ட ஸ்கோரை எட்டியது. கடந்த ஆண்டு அவர்கள் சாதனைப் படைத்த 287 ரன்களை விட ஒரு ரன் குறைவாக அடித்து, இரண்டாவது பெரிய ஸ்கோராக பதிவாகியுள்ளது.

- Advertisement -

இதே பார்மில் ஹைதராபாத் அணி தொடர்ந்தால், நிச்சயம் 300 ரன்களை எதிர்பார்க்கலாம். டேல் ஸ்டெயின் கூறியதாவது, ” ஒரு சின்ன கணிப்பு. ஏப்ரல் 17 அன்று முதல் 300 ரன்களைப் பார்ப்போம் என நினைக்கிறேன். ஒருவேளை நானே நேரடியாக அங்கிருந்து அதைக் காணலாம். ” என்றார். ஏப்ரல் 17 அன்று வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை ஹைதராபாத் எதிர்கொள்ளவுள்ளது. சிறிய எல்லைகள் மற்றும் பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம் என்பதால் 300 ரன்கள் என்ற இலக்கை எட்டுவதற்கு ஏற்ற இடமாகத் தெரிகிறது.

கடந்த ஆண்டும் இதே மைதானத்தில் ஹைதராபாத் மற்றும் மும்பை இடையே நடந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட்டிங் செய்து 277 ரன்களைக் குவித்தது. பதிலுக்கு மும்பை அணியும் 246 ரன்கள் வரை சென்று சிறப்பாகப் போராடியது. சன்ரைசர்ஸ் அணியின் ஆக்ரோஷமான அணுகுமுறை இங்கு தான் துவங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. டேல் ஸ்டெய்ன், ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரராகவும், பந்துவீச்சு பயிற்சியாளராகவும் பணியாற்றியவர். அவரது அனுபவமும், அணியின் தற்போதைய வலிமையைப் பற்றிய புரிதலும் இந்தக் கணிப்பை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles