ஓவரா ஆடினால் இப்படித்தான் முடியும்.. ப்ளே ஆஃப் போனதுக்கா இந்த ஆட்டம்.? ஆர்சிபியை சரமாரியாக விளாசும் ஸ்ரீகாந்த்

ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முக்கியமான எலிமினேட்டர் போட்டியில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து முன்னாள் தேர்வு குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஆர்சிபி அணியை சரமாரியாக விளாசி உள்ளார்.

- Advertisement -

இந்த சீசனின் பாதி வரை தோல்வியுடன் சென்று கொண்டிருந்த ஆர்சிபி அணி அதற்குப் பிறகு வெற்றிக்கான பார்முலாவை கண்டறிந்தது. அணியில் தேவையான மாற்றங்களை செய்து தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை கோப்பையை ஆர்சிபி அணி வெல்ல வேண்டும் என பெங்களூர் அணி ரசிகர்கள் மட்டுமல்லாமல் சிஎஸ்கே அணி ரசிகர்களும் விரும்பினர்.

- Advertisement -

ஏனெனில் அந்த அணியில் விளையாடிக் கொண்டிருக்கும் விராட் கோலி 17 வருடங்களாக தன்னால் முடிந்த அளவு பங்களிப்பை வழங்கியும், ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத நிலையில் இந்த முறை வெல்ல வேண்டும் என சிஎஸ்கே ரசிகர்கள் கூட நினைத்தனர்.

- Advertisement -

ஆனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் பெங்களூர் அணி வெற்றி பெற்ற பிறகு அளவுக்கு அதிகமாகவே அவர்களது வெற்றி கொண்டாட்டம் இருந்தது. சென்னை வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டம் இழந்து வெளியேற, பீல்டிங்கில் நின்று கொண்டிருந்த விராட் கோலியின் செய்கைகளும், மைதானத்தில் அமர்ந்து கொண்டிருந்த சிஎஸ்கே ரசிகர்கள் மீது அவர் கையை உயர்த்தும் காட்சிகளும் ரசிக்கும்படியாக இல்லை.

இது குறித்து இந்திய முன்னால் தேர்வு குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பெங்களூர், ராஜஸ்தான் போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே பெங்களூர் அணி இந்த போட்டியில் தோல்வியடையும் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் கூறியது போலவே பெங்களூரு அணி தோல்வி அடைந்து பிளே ஆப் சுற்றை விட்டு வெளியேறியது. வெற்றிக்கு பின்னர் அவர்கள் ஆடிய ஓவர் ஆட்டமே தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்த ஸ்ரீகாந்த் விரிவாக கூறும்பொழுது
“நான் கிரிக்கெட் கமெண்ட்ரில் அமர்ந்து கொண்டிருந்தபோது என்னுடைய சக வர்ணனையாளர் ஆன விஷ்ணு பெங்களூர் அணி சிஎஸ்கே அணியுடன் ஆன வெற்றிக்கு பிறகு  ட்ரெஸ்ஸிங் ரூமில்  ஆர்சிபி வீரர்களின் செயல்பாடுகளை காட்டினார். எனக்கு அப்போதே தோன்றியது ஆட்டம் அதிகமாக இருப்பதால், ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் பெங்களூர் தோல்வி அடைய வாய்ப்பு உண்டு என்று நினைத்தேன். நான் சொன்னது போலவே நடந்து விட்டது.

இதையும் படிங்க:தோனி கேப்டனா இருந்தா அது எதிரணிக்கு கண்டிப்பா பயம் தான்.. சூழ்நிலையைக் கணிப்பதில் அவர் வல்லவர்.. டிவில்லியர்ஸ் பேட்டி

நமது வேலையை சரியாக செய்து கொண்டிருந்தால், அமைதியாக செய்துவிட்டு கடந்து விட வேண்டும். எப்போது நமது ஆட்டம் அதிகமாக இருக்கிறதோ அப்போது கடவுள் என்ற ஒருவன் மேலே இருக்கிறான், அவன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை உணராமல் செய்தால் முடிவு இவ்வாறு தான் அமையும். இதை நம் வாழ்க்கை பாடமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும் ” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles