ஐசிசி தொடர வச்சுக்கிட்டு.. ரிஸ்வான் எடுக்குறது ரொம்ப முட்டாள்தனமான முடிவு.. பாக் முன்னாள் வீரர் கருத்து

பாகிஸ்தானில் நடைபெற்ற முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் எடுத்தது மூலையில்லாத முட்டாள்தனமான முடிவாகும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் அகமது ஷெஷாத் கூறி இருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வந்தது. இதில் தென்ஆப்பிரிக்க அணி ஏற்கனவே வெளியேறிய நிலையில் இறுதி போட்டிக்கு பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் தகுதி பெற்றன. இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை தாக்குப் புடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் 242 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய நியூசிலாந்து அணி, பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சை திறமையாக சமாளித்து 45.2 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 243 ரன்கள் குவித்து ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்யாமல் பேட்டிங்கை தேர்வு செய்தது பாகிஸ்தான் அணியின் கேப்டன் செய்த முட்டாள்தனமான முடிவு என முன்னாள் கிரிக்கெட் வீரர் அகமது ஷேஷாத் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” நேற்று நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் செய்தது மூளையில்லாத முட்டாள்தனமான முடிவாகும். ஏனென்றால் அதற்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் இரண்டாவதாக பேட்டிங் செய்தபோது பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. மேலும் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் பந்து நன்றாக சுழன்று வரவில்லை. இது அனைத்தும் தெரிந்தும் அவர் இப்படியான ஒரு முடிவை எடுத்தது குழந்தைத்தனமாகவே இருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க:விராட் கோலி சாதனையை முறியடித்த பாபர் அசாம்… கேலி செய்த பாகிஸ்தான் ரசிகர்கள்… நடந்தது என்ன

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு முன்னதாக பாகிஸ்தான் அணியின் பலவீனம் இப்போது வெளிப்படையாக தெரிந்துள்ளது. சமமான ஆட்டத்தை வெளிப்படுத்தும் எதிரணி சரியான முறையில் விளையாடாமல் போனாலோ அல்லது அந்த அணியின் முக்கிய வீரர் விளையாடாமல் போனால் மட்டுமே பாகிஸ்தான் அணி ஜெயிக்க வாய்ப்பு உள்ளது. இல்லையென்றால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவது மிகவும் சிரமமாகிவிடும். பாகிஸ்தான் அணியின் கேப்டன் ஒவ்வொரு முடிவிலும் பாதுகாப்பாக இருக்க விரும்புகிறார்” என்று அவர் கூறுகிறார்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles