பும்ரா மாறி வரணும்னா இத பண்ணுங்க.. மக்கள் உங்கள 20 வருஷத்துக்கு மறக்க மாட்டாங்க.. அறிவுரை கூறிய வாசிம் அக்ரம்

இந்த டி20 உலக கோப்பை தொடரில் பந்துவீச்சில் பும்ரா போல சிறப்பாக செயல்பட்ட மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஆன அர்ஸ்தீப் சிங் இந்த தொடரில் 17 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

- Advertisement -

இந்த நிலையில் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம் அர்ஷிதீப் சிங்கின் எதிர்காலம் குறித்து சில முக்கிய அறிவுரைகளை வழங்கி இருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக அறிமுகமான இவர், தனது ஸ்விங் பந்துவீச்சின் மூலம் அதிக மக்களின் கவனத்தை ஈர்த்தார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்து வீசியதன் காரணமாக இவர் டி20 உலக கோப்பை தொடரில் இடம் பிடித்தார். வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக ஆடுகளங்களில் மட்டுமல்லாமல் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களிலும் பந்துவீச்சில் கலக்கிய அர்ஸ்தீப் சிங் மொத்தமாக 17 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

பும்ரா இந்த தொடரில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தொடர் நாயகன் விருது பெற்றதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் மூலம் இந்தியாவின் வழக்கமான பந்துவீச்சாளராக மாறியுள்ள அர்ஸ்தீப் சிங்குக்கு சிறந்த பந்துவீச்சாளராக வர விரும்பினால் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “அர்ஷ்தீப் மிகவும் ஈர்க்கக்கூடிய பந்துவீச்சாளராக இருப்பதால், இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன். பந்தை இருபுறமும் ஸ்விங் செய்வதில் வல்லவராக திகழ்கிறார். மேலும் ரன்களையும் அதிக அளவில் லீக் செய்வதில்லை. எனவே இனிவரும் காலங்களில் இந்திய அணியின் நிரந்தர பந்துவீச்சாளராக இருக்கும் திறமையை இவர் பெற்றிருக்கிறார்.

- Advertisement -

இருப்பினும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்துவார் என்று நம்பிக்கை எனக்கு உள்ளது. ஏனெனில் டி20 கிரிக்கெட்டில் சாதித்தால் அதிக பணம் கிடைக்கும். டி20 கிரிக்கெட்டில் சாதித்தால் உங்களுக்கான பெயர் ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ மட்டுமே இருக்கும். ஆனால் உங்கள் பெயரை நிரந்தரமாக பதிவு செய்ய விரும்பினால் அதற்கு டெஸ்ட் கிரிக்கெட் தான் ஒரே வழி. உங்களோட பெயரை நிரந்தரமாக பதிவு செய்ய டெஸ்ட் கிரிக்கெட்டை பின்பற்ற வேண்டும்.

இதையும் படிங்க:மும்பை ரசிகர்கள் போலவே.. ஹர்திக் பாண்டியா என்னையும் அப்படி நினைக்க வைத்து விட்டார்- டிவில்லியர்ஸ் பேட்டி

அங்கே நீங்கள் சாதித்தால் மட்டுமே மக்கள் உங்களை பத்து முதல் 20 வருடங்கள் கழித்தாலும் இது போன்ற பவுலர் இனி கிடைக்கப் போவதில்லை என்று உங்களை மனதில் வைத்திருப்பார்கள். அவர் மட்டுமல்லாமல் இனிவரும் இளம் பந்துவீச்சாளர்களும் இதனை மனதில் கொண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் கவனம் செலுத்த வேண்டும். அதை செய்வதற்கான திறமை அவரிடத்தில் நிச்சயம் உண்டு என்பதை நான் அறிவேன். அவருக்கு நான் பத்துக்கு எட்டு மதிப்பெண்கள் கொடுக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles