தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்தது ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவர். அந்த ஓவரில் டேவிட் மில்லர் அவுட் ஆன பிறகு தான் ஆட்டம் இந்தியாவின் கைகளில் வந்தது.
இது குறித்து தென்னாபிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் ஹர்திக் பாண்டியா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஹர்திக் பாண்டியாவுக்கு இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்பாக எதுவுமே சரியாக அமையவில்லை என்றுதான் கூற வேண்டும். ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் ராஜாவாக வலம் வந்தவர், மும்பை அணிக்கு மாறிய பிறகு அனைத்துமே அவருக்கு தலைகீழாக மாறியது. சொந்த மாநில ரசிகர்களே அவருக்கு எதிராக குரல் கொடுத்தனர். ஐபிஎல் தொடரின் ஒவ்வொரு போட்டியிலும் மும்பை அணிக்காக அவர் களமிறங்கினாலே ரசிகர்கள் அவருக்கு எதிராக குரல் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இவை அத்தனையும் ஒரே ஒரு உலகக்கோப்பை தொடர மூலமாக, அனைவரும் தாங்கள் அப்படி செய்தது தவறு என்று நிரூபிக்கும் வகையில், தனது திறமையை நிரூபித்தார் ஹர்த்திக் பாண்டியா. ஒவ்வொரு போட்டியிலும் இக்கட்டான சூழ்நிலையில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார். இந்த சூழ்நிலையில் இறுதிப் போட்டியில் மும்பை ரசிகர்கள் போலவே நானும் ஹர்திக் பாண்டியா சிறப்பாக செயல்படக்கூடாது என்று நினைத்ததாக டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்பொழுது “குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு தாவிய பின்னர் மிகப்பெரிய விமர்சனங்களை சந்தித்தார். அவற்றையெல்லாம் கடந்து டி20 உலக கோப்பையில் கேப்டன் ரோகித் சர்மாவிடமிருந்து பந்தை வாங்கி இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்திருக்கிறார். இதன் மூலமாக ஒரு வீரராக நான் இதைத்தான் எப்போதும் செய்கிறேன் என்று ரசிகர்களுக்கு அவர் கூறிய தருணமாக இது அமைந்திருக்கிறது.
வரலாற்றில் இது போன்ற தருணங்கள் எப்போதுமே தனித்து நிற்கக் கூடியவை. இந்த இடத்திலிருந்து அவர் அனைத்து இந்தியர்களையும் பெருமைப்பட வைத்திருக்கிறார். சொல்லப்போனால் நானும் இறுதிப் போட்டியில் அவர் அவ்வாறு செயல்படக் கூடாது என்று நினைத்தேன். ஆனால் எதிரணி தென்னாப்பிரிக்காவாக இருப்பதால்தான்.
இதையும் படிங்க:சிக்கலில் தவிக்கும் ஐபிஎல் நிர்வாகம்.. பிடிவாதமாக இருக்கும் அணிகள்.. நல்ல முடிவை எடுக்குமா பிசிசிஐ?
ஆனால் தற்போது பாண்டியா அனைத்திற்கும் மரியாதைக்குரியவராக இருக்கிறார். அவரை சந்தேகப்பட்ட அனைத்து மும்பை இந்தியன்ஸ் ரசிகர்கள் மத்தியிலும் அவர் நீங்காத இடத்தை பிடித்திருக்கிறார் என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்வேன்” என்று ஏபிடி கூறியிருக்கிறார்.

