ரோஹித் கம்பீர் ஒற்றுமையா இல்ல.. அப்படி இருந்தா என்னோட இந்த கேள்விக்கு விடை கிடைத்திருக்கும் – பசித் அலி பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்து வலுவான நிலையில் இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான பசித் அலி இந்திய கிரிக்கெட் வீரர்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில், முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. அதற்குப் பிறகு இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணி தடுமாற்றமான நிலையில் செயல்பட்டு வருகிறது. இரண்டாவது போட்டியில் தோல்வி அடைந்தது மட்டுமல்லாமல் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் முதல் இன்னிங்ஸில் 51 ரன்களுக்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தத்தளிக்கிறது.

- Advertisement -

பும்ரா தலைமையில் முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் இரண்டாவது போட்டியில் தோல்வியடைந்து மூன்றாவது போட்டியிலும் தடுமாறி வரும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான பசித் அலி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் ஆகியோருக்கிடையே ஒற்றுமை இருப்பதாக தெரியவில்லை என்று ஆச்சரியமூட்டும் கருத்து ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் இடையே ஒற்றுமை இருப்பதாக தெரியவில்லை. இது இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடராக இருந்தாலும் சரி, அதற்கு பின்னர் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடராக இருந்தாலும் சரி, கடைசியாக நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடராக இருந்தாலும் சரி எதிலுமே இந்த இருவருக்கும் இடையே ஒற்றுமை இருப்பதாக தெரியவில்லை.

- Advertisement -

இதையும் படிங்க:ஆஸி டெஸ்ட்.. தவறை திருத்தாத விராட் கோலி.. பேட்டிங் கோச் என்ன செய்றாரு.. சஞ்சய் மஞ்சுரேக்கர் கேள்வி

ஏனென்றால் டிராவிட் பயிற்சியாளராக இருந்தபோது அணியின் கேப்டன் ரோகித் மற்றும் டிராவிட் ஆகியோர் ஒன்றாக ஒற்றுமையாகவே செயல்பட்டார்கள். இப்போது சமீப காலமாக அந்த ஒற்றுமையை பார்க்க முடியவில்லை. மூன்று டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி மூன்று ஸ்பின்னர்களைக் கொண்டு வந்து விளையாடுகிறது. முதல் போட்டியில் டாஸ் வென்ற பேட்டிங் செய்தார்கள் தற்போது டாஸ் வென்று பந்து வீசுகிறார்கள். ஆஸ்திரேலியா அணியில் மூன்று இடது கை பேட்ஸ்மேன்கள் இருக்கும்போது சுந்தர் அல்லது அஸ்வின் ஆகியோரில் ஒருவர் கூட அணியில் இல்லை” என்று குறிப்பிட்டு பேசியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles