ரோஹித் சமிக்கு இதை செய்ய வேணாம்.. அப்படி செஞ்சா இந்திய அணிக்கு வேஸ்ட்தான் – பாக் பசித் அலி பேட்டி

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகிற 14-ஆம் தேதி பிரிஸ்பேனில் உள்ள கபாவில் நடைபெற இருக்கிறது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் மிகத் தீவிரமான முறையில் தயாராகி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான பசித் அலி முகமது சமி குறித்து முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

முகமது சமி கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் காயம் காரணமாக வெளியேறிய நிலையில் அவர் நீண்ட காலமாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு ஓய்வு எடுத்து வந்தார். இந்த சூழ்நிலையில் காயம் குணமாகி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு தொடரான சையது முஸ்தாக் அலி தொடரில் விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் ரோகித் சர்மா சமியின் உடல்நிலை குறித்து தீவிரமாக கவனித்து வருகிறோம். நிபுணர்கள் கூடவே இருந்து அவரை கவனித்து வருகிறார்கள்.

- Advertisement -

சையது முஸ்தாக் அலி தொடரில் விளையாடும் போது சமிக்கு முட்டியில் சிறிய வீக்கம் இருந்தது. எனவே அவருக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் இருப்பது முக்கியம். சமி விளையாட தயாராக இருந்தால் அவருக்கு இந்திய அணியின் கதவுகள் திறந்தே இருக்கும் என்று ரோகித் சர்மா கூறியிருந்தார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி சமி விளையாடும் நிலைக்கு வந்தால் அவர் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே விளையாடவேண்டும் எனவும் நான்காவது போட்டியில் விளையாடுவது வீண் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இதுகுறித்து பசித் அலி விரிவாக கூறும்போது “சமி ஆஸ்திரேலியா செல்லப் போகிறார் நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்ற தகவல் வெளிவருகிறது. அவர் நான்காவது டெஸ்டில் விளையாடினால் இந்திய அணிக்கு எந்த பயனும் கிடையாது. எனவே அவரை இப்போதே அனுப்பி மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்க வழிவகை செய்ய வேண்டும். ஒருவேளை அவரை நான்காவது டெஸ்ட் போட்டிக்கு விளையாட வைப்பதாக இருந்தால் அது தேவைப்படாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:“சிராஜ் உனக்கு அறிவே இல்லயே ? பைத்தியமா புடிச்சிருக்கு ?.. ” ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் பக்கம் நின்று சிராஜை கடுமையாக விமர்சித்துள்ள ஶ்ரீகாந்த்

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்து வீச்சு மிகவும் சுமாராகவே இருந்தது. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு சமி விளையாட வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கும் நிலையில் அவரது உடல் தகுதியில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்று ரோகித் சர்மா கூறியிருக்கிறார். எனவே அவர் விளையாடுவாரா? அல்லது நான்காவது போட்டியில் விளையாடுவாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles