இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் தற்போது விளையாடி வருகிறது.
இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பாசித் அலி பும்ரா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடும் நிலையில் பும்ரா தலைமையிலான இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பந்து வீச்சிலும் சிறப்பாக கலக்கிய பும்ரா முதல் இன்னிங்ஸில் 5 விக்கட்டுகளும் இரண்டாவது இன்னிங்சில் மூன்று விக்கெட்டுகளும் வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சை பெரிதாக ரன்களுக்கு செல்லாமல் மற்ற பந்துவீச்சாளர்களின் மீது ஆதிக்கம் செலுத்தியது. இதனால் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா அணி 337 ரன்கள் குவித்தது. இதில் பும்ரா 23 ஓவர்கள் பந்துவீசி 61 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் கைப்பற்றினார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் பாஸித் அலி வாசிம் அக்ரமுக்கு பிறகு பும்ராவுக்கு தான் அதிகம் பயப்படுகிறார்கள் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மற்ற பந்துவீச்சாளர்களை காட்டிலும் பும்ரா மீது தனிப்பட்ட கவனம் செலுத்தி விளையாடி வருகிறது. ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் பும்ராவுக்கு எதிராக தைரியமாக ஆக்ரோஷமான முறையில் விளையாடச் செல்ல மாட்டார்கள். பாகிஸ்தான் லெஜன்ட் கிரிக்கெட் வீரர் வாசிம் அக்ரமுக்கு பிறகு பும்ராவின் பந்துவீச்சில் தான் ஆஸ்திரேலிய வீரர்கள் பயப்படுகிறார்கள்.
இதையும் படிங்க:விராட் கோலி ரொம்ப கேவலமா அவுட் ஆகிறார்.. டெஸ்ட்ல மோசமா போனதுக்கு காரணமே அவரின் பிடிவாதம் தான் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து
அவர் மீது ஆதிக்கம் செலுத்தி யாரும் விளையாட முன்வர மாட்டார்கள். அவருக்கு பதிலாக மற்ற பந்துவீச்சாளர்களை தான் குறி வைத்து விளையாடுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார். பாசித் அலி சொன்னதைப் போலவே இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவின் பந்துவீச்சை தவிர மற்ற பந்துவீச்சாளர்களை தான் ஆஸ்திரேலியா வீரர்கள் அதிக அளவில் குறி வைத்து விளையாடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் நான்கு விக்கெட் இழப்புக்கு 104 ரன்கள் குவித்து விளையாடி வரும் நிலையில் இன்னும் 52 ரன்கள் பின்தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

