விராட் கோலி ரொம்ப கேவலமா அவுட் ஆகிறார்.. டெஸ்ட்ல மோசமா போனதுக்கு காரணமே அவரின் பிடிவாதம் தான் – சஞ்சய் மஞ்சரேக்கர் கருத்து

நேற்று அடிலெய்டு மைதானத்தில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி துவங்கியது. பிங்க் பந்து மற்றும் பகள் இரவு டெஸ்ட் போட்டியாக இது நடக்கிறது. வழக்கம் போல பிங்க் பந்து டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா ஆதிக்கம் செலுத்துவது போலவே முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய கை ஓங்கி உள்ளது.

- Advertisement -

டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. கடந்த போட்டியில் அபார சதம் விளாசிய ஜெஸ்வால் இந்த முறை டக் அவுட் ஆகி வெளியேறினார். இருப்பினும் கே.எல்.ராகுல் – கில் ஜோடி சிறப்பாக ஆடி நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆனால் விரைவில் 69/1 என இருந்த இந்திய அணி, அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் விழுந்து 87/5 என சரிவைச் சந்தித்தது.

- Advertisement -

முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்சில் அமர்க்களமாக விளையாடி சதம் விளாசிய விரா கோலி நேற்று வெறும் 7 ரன்னில் மிகவும் மோசமாக ஆட்டமிழந்தார். மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்தை ஆடலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் அவர் கடை வரை இருக்க, பேட்டில் பந்து பட்டு ஸ்லிப்பில் ஸ்டீவ் ஸ்மித் கையில் சென்று அமர்ந்தது.

- Advertisement -

இதே போலத் தான் முதல் போட்டியிலும் அவர் அவுட் ஆகினார். இத்தகைய ஆட்டமிழப்பு இதற்க்கு முன்பு சில முறை கோலிக்கு நடந்துள்ளது. இது பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர் தன் டிவிட்டர் பக்கத்தில் போஸ்ட் ஒன்றைப் போட்டு தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

அவர் கூறியதாவது, ” விராட் கோலியின் டெஸ்ட் சராசரி 55 இல் இருந்து 48க்கு குறைந்ததற்கு மிக முக்கியக் காரணம், ஆஃப் சைடுக்கு வெளியில் அவருக்கு இருக்கும் வீக்னெஸ் தான். மேலும் இதைத் தவிர வேறு எதுவும் முயற்சி செய்யமாட்டேன் என அவர் பிடிவாதமாக இருப்பதும் ஓர் காரணம். ” என்றார்.

- Advertisement -

சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியது போல, கடந்த 4-5 வருடங்களில் விராட் கோலி ஸ்டம்புக்கு வெளியில் செல்லும் பந்தை ஆட முயற்சித்து பல முறை விக்கெட்டைப் பறிகொடுத்துள்ளார். அவரை இதனைத் திருத்தினால் மட்டுமே பழைய 2016/17 கோலியைப் பார்க்க முடியும்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles