இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்த கையோடு ரவிந்திர ஜடேஜா, விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் மூவரும் தங்களது ஓய்வினை அறிவித்திருக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வரும் விவிஎஸ் லட்சுமணன் உலக கோப்பை தருணங்கள் குறித்து சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்திய மக்கள் அனைவரும் இந்தத் தருணத்திற்காக தான் காத்திருந்தார்கள் என்பது போல இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி20 உலக கோப்பையை வென்று மக்களின் தாகத்தை போக்கியிருக்கிறது. இந்திய கேப்டனாக அப்போது மகேந்திர சிங் தோனி மக்களை எவ்வாறு மகிழ்வித்தாரோ அதேபோல தற்போது ரோகித் சர்மாவும் மகிழ்வித்து இருக்கிறார்.
அதோடு விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரோகித் சர்மா போன்ற முன்னணி ஜாம்பவான் வீரர்கள் தங்களது டி20 ஃபார்மேட்டில் இருந்து ஓய்வினை அறிவித்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் பயிற்சியாளர் ராகுல் ராவிட்டும் தனது ஓய்வினை அறிவித்துள்ளார். இந்த சூழ்நிலையில் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு பயிற்சியாளராக லட்சுமணனை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது. லட்சுமணன் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக விளங்கி வரும் நிலையில் அவ்வப்போது இந்திய அணி செல்லும் தொடர்களுக்கும் பயிற்சியாளராக விளங்கி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் டி20 ஃபார்மெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்த மூவர் குறித்தும் மற்றும் ராகுல் டிராவிட் குறித்தும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார். இது குறித்து அவர் விரிவாக கூறும் பொழுது “விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகிய மூவருமே ஜாம்பவான் வீரர்கள். அவர்கள் இந்திய கிரிக்கெட்டுக்காக மிகப்பெரிய அளவில் செயல்பட்டு இருக்கிறார்கள் நான் அவர்களை பாராட்டுகிறேன்.
இவர்கள் மூவரையும் இளைஞர்கள் ஒரு முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு முன்னேற வேண்டும். அவர்கள் இந்த வடிவத்தில் இருந்து ஓய்வு பெற்றாலும் மற்ற இரண்டு தொடர்களிலும் சிறப்பாக செயல்படுவார்கள் என்று நம்புகிறேன். ராகுல் டிராவிட் உடன் நான் பல காலம் கிரிக்கெட் விளையாடி இருக்கிறேன். ஆனால் அவர் இவ்வளவு உணர்ச்சிகளை கொட்டி நான் பார்த்தது இல்லை.
இதையும் படிங்க:சர்வதேச கிரிக்கெட்டில் 50000 பந்துகள்.. யாருமே தொட முடியாத உச்சம்.. ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை
அவர் உலகக்கோப்பையை வென்று கையில் ஏந்திய போது அவர் காட்டிய உணர்ச்சிகள் அர்த்தமுள்ளதாக இருந்தது. அவர் மட்டுமல்லாமல் அணியிலிருந்து ஒவ்வொருவரும் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினார்கள். இதன் மூலம் இந்த உலகக் கோப்பை அணிக்கு எவ்வளவு முக்கியம் என்பதை தெளிவாக உணர்த்தியது. ராகுல் டிராவிட் கோப்பையை ஏந்தி கொண்டாடியது ஆச்சரியமாக இருந்தது” என்று கூறியிருக்கிறார். இந்திய அணிக்கு தற்போது நிரந்தர தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

