சர்வதேச கிரிக்கெட்டில் 50000 பந்துகள்.. யாருமே தொட முடியாத உச்சம்.. ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது கடைசி கிரிக்கெட் போட்டியை லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் வேளையில் யாருமே படைக்காத ஒரு புதிய சாதனையை வேகப்பந்து வீச்சாளர் தற்போது படைத்திருக்கிறார்.

- Advertisement -

நவீன காலத்தில் கிரிக்கெட் விளையாடி வரும் வீரர்கள் தொடர்ச்சியாக காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு வேகப்பந்துவீச்சாளர் 21 வருடம் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் நிலையில் தனது உடலையும் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு இளம் வீரர்களுக்கே சவால் அளிக்கக் கூடிய வகையில் பந்து வீசி வருகிறார் என்றால் அது ஜேம்ஸ் ஆண்டர்சன் ஒருவரால் மட்டுமே முடியும்.

- Advertisement -

2003 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஆரம்பித்தது இவர டெஸ்ட் கிரிக்கெட் பயணம். அன்றிலிருந்து இன்று வரை இவர் காயம் காரணமாக வெளியேறி இருப்பதை பார்த்து இருப்பது என்றால் அது மிகவும் அரிது. கிட்டத்தட்ட 21 வருடங்கள் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரலாறு படைத்திருக்கிறார். தனது கடைசி டெஸ்ட் போட்டியான வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடி வரும் ஆண்டர்சன் இரண்டாவது இன்னிங்ஸில் பத்தாவது ஓவரை வீசி முடித்ததன் மூலம் ஒரு சாதனையை படைத்துள்ளார்.

அவர் சரியாக பத்து ஓவர்களை வீசி முடிக்கும் போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 40001 பந்துகளை வீசி முடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை எந்த ஒரு வேகப்பந்துவீச்சாளரும் 40,000 பந்துகளை வீசியதில்லை. அந்த சாதனையை தற்போது ஆண்டர்சன் எட்டி இருக்கிறார். சுழற்பந்துவீச்சாளர்களான முத்தையா முரளிதரன், வார்னே, கும்ப்ளே போன்றவர்கள் வேண்டுமானால் சுழலில் 40 ஆயிரம் பந்துகளை எட்டி இருக்கிறார்கள்.

- Advertisement -

ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் ஒரு நாள் போட்டி மற்றும் டி20 போட்டி என அனைத்தையும் சேர்த்து மொத்தமாக 50000 பந்துகளையும் வீசி சாதனை படைத்துள்ளார். இந்த மைல் கல்லை இதுவரை எந்த ஒரு வேகப் பந்துவீச்சாளரும் எட்டியதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஐபிஎல்னால எங்க வீரர்கள் கெட்டு போய்ட்டாங்க.. இப்படி விளையாடுவதற்கு போய் சர்க்கஸ்ல வித்தை காட்டலாம்- பாய்காட் விமர்சனம்

ஆண்டர்சன் சரியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 40001 பந்துகள், ஒரு நாள் கிரிக்கெட்டில் 9584 பந்துகள், டி20 கிரிக்கெட்டில் 422 பந்துகள் என்று மொத்தமாக 50007 பந்துகளை இதுவரை வீசி இருக்கிறார். இந்த மைல் கல்லை சுழற் பந்துவீச்சாளர்களான முத்தையா முரளிதரன், வார்னே மற்றும் கும்ப்ளே ஆகியோர் எட்டி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடும் ஆண்டர்சன் இதுவரை 10 ஓவர்கள் வீசி ஐந்து ஓவர்கள் மெய்டனுடன் 11 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles