சச்சினிடம் இருக்குற 2 விஷயம் கோலிகிட்ட இல்ல.. அதனாலதான் ஒரே மாதிரி அவுட் ஆகுறாரு – இர்பான் பதான் பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 185 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டம் இழந்தது.

- Advertisement -

மேலும் இந்திய அணியின் விராட் கோலி ஆட்டம் இழந்த விதம் குறித்து முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி வெற்றி பெற்றாக வேண்டிய ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் நிலையில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் இந்த டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடி வந்த கேஎல் ராகுல் மற்றும் ஜெய்ஸ்வால் விரைவிலேயே ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். அதற்குப் பிறகு களம் இறங்கிய விராட் கோலி இந்த முறை ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்படும் பந்துகளை கவனமாக விட்டு நிதானமாக ஆடினார்.

- Advertisement -

இதனால் கில் மற்றும் விராட் கோலி கூட்டணி 106 பந்துகளை எதிர் கொண்டு 40 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தது. இந்த நிலையில் 17 ரன்கள் எடுத்திருந்த விராட் கோலி திரும்ப போலன்ட் பந்துவீச்சில் ஆப் ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தில் திரும்பவும் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்பான் தான் விராட் கோலி ஆட்டம் இழந்த விதம் குறித்து சில முக்கிய கருத்தை கூறியிருந்தார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது “இவ்வளவு பெரிய வீரர் ஒரே முறையில் திரும்பத் திரும்ப ஆட்டம் இழந்து வருகிறார். ஒரு தவறுக்கும் இன்னொரு தவறுக்கும் இடையில் நீண்ட இடைவெளி என்பது இருக்க வேண்டும். பெரிய வீரர்கள் என்பது அதுபோல செயல்பட வேண்டும். விராட் கோலி இதே போல ஆறு முறைக்கு மேல் ஆட்டம் இழந்து இருக்கிறார். இன்று அவர் ஆட்டம் இழந்த பந்து அவருக்கு வெகு தொலைவில் இருந்தது. மீண்டும் ஒருமுறை விராட் கோலி அதே தவறை செய்து வெளியேறி இருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:ஏமாற்று வேலையின் உச்சம்! கேட்ச் பிடித்ததாக அவுட் கேட்ட ஸ்மித்.. 3ஆம் நடுவரிடம் கொத்தாக சிக்கிய ஆஸ்திரேலியா.. சர்ச்சையான கோலி நாட் அவுட்

பேட்டிங் ஒழுக்கத்தை பொருத்தவரை விராட் கோலி சச்சின் போன்று செயல்பட வேண்டும். ஆனால் சச்சினுக்கு ஆப் சைடு வீசப்படும் பந்துகளை விளையாடுவதற்கு அப்பர்கட் மற்றும் கட் ஷாட்கள் இருந்தன. ஆனால் விராட் கோலிக்கு அதுபோன்ற ஷாட்கள் எதுவும் இல்லாததால் கவர் டிரைவ் ஆட முயற்சிக்கிறார். இல்லையெனில் பந்தை தடுக்க முயற்சித்து ஆட்டம் இழந்து வெளியேறுகிறார்” என்று இர்பான் பதான் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles