இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே ஆன இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி தொடர்ச்சியாக தனது இரண்டாவது சதத்தை அடித்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான ஜாஹிர் கான் இது குறித்து சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மூன்றாவதாக பேட்டிங் செய்ய களம் இறங்கிய விராட் கோலி தனது ரன் கணக்கை ஃபுல் ஷாட் பந்தில் சிக்சர் அடித்து ஆரம்பித்தார். அதற்குப் பிறகு பவுண்டரி அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பொதுவாக மெதுவாக ரன் கணக்கை துவங்கும் விராட் கோலி கடந்த இரண்டு போட்டிகளாக அதிரடியாக விளையாடுவதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில் ஜாகிர் கான் இது குறித்து கூறியிருப்பதாவது “இந்த போட்டியில் விராட் கோலி மற்றும் ருத்ராஜின் பார்ட்னர்ஷிப் என்பது மிக முக்கியமான விஷயம். இருப்பினும் விராட் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் என்பது மிகவும் கவனிக்க வேண்டிய விஷயமாகும். இதன் மூலம் அவர் எடுத்ததுமே அதிரடியாக விளையாட ஆரம்பித்து விட்டார் என்று புரிந்து கொள்ளலாம் அவர் பந்து வீச்சாளர்களை பார்த்து பயப்படவில்லை. இந்தக் கட்டத்தில் இது ஒரு சிறந்த அறிகுறியாக இருக்கிறது” என்று அவர் பேசி இருக்கிறார்.

