இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 போட்டிகளில் தோல்வி அடைந்திருந்த நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய கிரிக்கெட் நிர்வாகத்தின் தெளிவில்லா தன்மையால் தான் நான், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் முன்னரே டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டிய துணியில் பேசி இருந்தார்.
இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரான சுனில் கவாஸ்கர், ரவிச்சந்திரன் கூறிய கருத்துக்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதாவது அஸ்வின், விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருந்த போது தான் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து வெளியேறினோம். அதேபோல ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரிலும் இந்த நிகழ்வு தான் நடந்தது என்று கூறி இருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “ஓய்வு முடிவு என்பது வீரர்கள் தனிப்பட்ட முறையில் எடுப்பதாகும். ஒருவேளை நிர்வாகம் அவர்களது எதிர்காலம் குறித்து யோசிக்க சொல்லி இருக்கலாம். ஆனால் அவர்கள் இருந்திருந்தால் இந்தத் தொடரை வெற்றி பெற்றிருப்போம் என்று கூறுவது ஏற்க இயலாது. ஏனென்றால் அவர்கள் மூவரும் இருந்த போதுதான் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரிலும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் தோல்வியடைந்தோம். எனவே அவர்கள் இருந்திருந்தாலும் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக தொடரை தோற்பதற்கு வாய்ப்புண்டு. எனவே இதனை இப்படி அணுக கூடாது” என்று பேசி இருக்கிறார்.

