இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வியடைந்திருந்த நிலையில், அதற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தலைமை பயிற்சியாளர் ஆன கௌதம் கம்பீர், தவறு என்னை மட்டுமே சொல்லக்கூடாது வீரர்கள் அனைவரின் மீதும் இதற்குப் பொறுப்பு இருக்கிறது என்கிற ரீதியில் பேசி இருந்தார். இதுகுறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ் சில விமர்சனங்களை அவர் மீது வைத்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் போது “இந்திய அணி டெஸ்ட் தொடரில் தோல்வி அடையும்போது இது அனுபவம் அற்ற அணி என்று நீங்கள் தான் கூறினீர்கள். ஆனால் சீனியர் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை வெளியேற்றியது நீங்கள் தான். மேலும் அணி தோல்வியடையும்போது தன்மீது மட்டும் விமர்சனங்கள் இல்லாமல் வீரர்கள் மீதும் வைக்க வேண்டும் என்கிற ரீதியில் பேசினீர்கள். இந்த இடத்தில்தான் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வேறுபடுகிறார்.
அணி தவறு செய்தால் முழு பொறுப்பையும் தன் மேல் போட்டுக்கொண்டு வீரர்களுக்கு போதிய பாதுகாப்பை வழங்கினார். இப்படி இருந்தால்தான் வீரர்கள் உங்களுக்காக உயிரைக் கூட கொடுத்து விளையாடுவார்கள். மேலும் டி20 உலக கோப்பையில் சூரியகுமார் யாதவ் கடைசியில் அந்த கேட்சை பிடிக்காமல் விட்டிருந்தால் கூட ரோஹித் சர்மா அது குறித்து எதுவும் பேசி இருக்க மாட்டார். அந்த இடத்தில் தான் ஒரு கேப்டனாக ரோகித் சர்மா வெற்றி பெறுகிறார்” என்று அவர் பேசி இருக்கிறார்.

