டெஸ்ட் கிரிக்கெட்ல கூட இந்த வித்தையை பும்ராவால செய்ய முடியும்.. அதனால்தான் அவர் உலகின் டாப் பவுலர்.. சபாகரீம் புகழாரம்

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாள் ஆட்ட நேரம் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா ஏன் முக்கிய பந்துவீச்சாளராக இருக்கிறார் என்பதற்கு இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து சபா கரீம் கூறும்போது “போட்டியின் எந்த சூழ்நிலையிலும் பும்ரா முழு கண்ட்ரோலை தன்னிடம் வைத்திருக்கிறார். எதிரணி பேட்ஸ்மேன்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு சரியான திட்டங்களை வகுத்து பந்து வீசுகிறார். அதனால் தான் அவரால் எந்நேரத்திலும் பெரிய பார்ட்னர்ஷிப்பை கூட உடைக்க முடிகிறது. அதனால் தான் அவர் உலகின் டாப் பவுலராக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை நீண்ட ஸ்பெல் வீசுவதை விட சரியான நேரத்தில் பார்ட்னர்ஷிப் முறியடிப்பது முக்கியம். அதனை இவர் சரியாக செய்து வருகிறார்.

- Advertisement -

இதையும் படிங்க:தயவு செஞ்சு இந்த போட்டியை பார்த்திருங்க.. காலத்துக்கும் அழியாத வரலாறு.. இந்திய அணியின் மோசமான தோல்வியை வறுத்தெடுத்த அஸ்வின்

- Advertisement -

அந்த வகையில் தேவையானபோது இந்திய கேப்டன்கள் அவரை கொண்டு வந்து எதிரணியின் விக்கெட்டை வீழ்த்தி விடுகிறார்கள்” என்று அவர் பேசி இருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுகள் பும்ரா வீழ்த்தியிருக்கும் நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் தற்போது வரை ஒரு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles