வங்கதேச அணிக்கு எதிரான ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி சூப்பர் ஓவரில் ஒரு ரன் கூட எடுக்காமல் மோசமாக தோல்வி அடைந்து வெளியேறியது. இந்த சூழ்நிலையில் இது குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்திய அணி குறித்து பேசி இருக்கிறார்.
இந்தியா ஏ அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 194 ரன்கள் குவிக்க பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி 194 ரன்கள் எடுத்து ஆட்டம் சூப்பர் ஒர்க்கு சென்றது. இதை எடுத்து 15 பந்துகளில் 38 ரன்கள் குவித்த வைபவ் சூர்யவன்சியை சூப்பர் ஓவருக்கு பேட்டிங் செய்ய அனுப்பாமல் கேப்டன் ஜித்தேஷ் சர்மா சென்று போல்ட் ஆகி வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து அசுதோஸ் சர்மாவும் அவுட் ஆக, இந்திய அணி ரன் கணக்கை துவங்காமலேயே இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்து தோல்வியடைந்தது. இதனால் விரத்தி அடைந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நேற்றைய இந்தியா மற்றும் வங்கதேசையே போட்டியை பார்க்காதவர்கள் தயவு செய்து பார்த்து விடுங்கள். இப்போட்டி காலத்தால் அழியாது’ என்று தனது விரக்தியை பதிவு செய்திருந்தார். அதாவது கேப்டனின் ஒரு தவறான முடிவால் அணி மோசமான தோல்வி அடைந்திருக்கிறது என்று தனது மறைமுக கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

