இந்திய கிரிக்கெட் அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டிலும் தோல்வி அடைந்து மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வெற்றிகரமான கேப்டன் ஆக இருந்த கபில் தேவ் இது குறித்து சில முக்கிய கருத்துகளை பகிர்ந்து இருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி அனுபவும் இல்லாத இளம் வீரர்களை வைத்துக்கொண்டு தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் சொந்த மண்ணில் இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது. இதில் இந்திய அணியில் ஆடிய பெரும்பாலான நபர்கள் ஐபிஎல் தொடரில் ஆடிய அனுபவம் கொண்டவர்கள் மட்டுமே. இதுகுறித்து கபில்தேவ் உள்நாட்டுத் தொடரில் அனுபவமான வீரர்களை தேர்வு செய்யாததே இதற்கு முக்கிய காரணம் என்று பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “பிசிசிஐ ஐபிஎல் தொடர் போன்ற டி20 தொடர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதால் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் வீரர்களின் தரம் வெகுவாக குறைந்துவிட்டது. தற்போதைய டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு விவிஎஸ் லட்சுமணன், டிராவிட், புஜாரா போன்ற அனுபவ வீரர்கள் தான் தேவை. அது போன்ற வீரர்கள் இப்போது இந்திய அணியில் இல்லை. ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை ஆடி மேட்ச் வின்னர் ஆக மாறியவர்கள். எனவே அவர்கள் போன்ற வீரர்களிடம் மெதுவாக அட சொல்லி கேட்க முடியாது” என்று அவர் பேசி இருக்கிறார்.

