ரோஹித் ஏன் ஹெட்டுக்கு இதை செய்யல.. கேப்டன்சி அவருக்கு மந்தமா இருக்கு – ஆகாஷ் சோப்ரா கருத்து

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா ரோஹித் சர்மா குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான ஆட்டத்தால் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது . இதில் ட்ராவிஸ் ஹெட் 141 பந்துகளை எதிர்கொண்டு 140 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இவர் ஏற்கனவே கடந்த ஒரு நாள் உலகக் கோப்பை போட்டியிலும், அதற்குப் பிறகு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியிலும் சிறப்பாக விளையாடி இந்தியாவின் கோப்பைகள் கனவை உடைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் டிராவிஸ் ஹெட்டின் பலவீனமாக பார்க்கப்படும் ஷார்ட் பிட்ச் பந்துகளை ரோஹித் சர்மா ஏன் உபயோகப்படுத்தவில்லை என்பது கேள்விகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையான பந்துகள் வீசாததே இந்திய அணியின் தோல்விக்கும் காரணமாக கூறப்படும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “டிராவிஸ் ஹெட்டுக்கு பவுன்சர் பந்துகளை வீசினோமா? நிச்சயமாக செய்திருக்க வேண்டும். அந்த வகையான பந்துகள் வீசாத வரை அவர் நமக்கு தொந்தரவாக இருப்பார். ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப்போட்டி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் தற்போது கடந்த போட்டி என பெரிய பிரச்சனையாக இருக்கிறார். பும்ரா அந்த சூழ்நிலையில் 4 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தார்.

- Advertisement -

இதையும் படிங்க:தகாத வார்த்தையில் திட்டியது ஹெட் தான்.. செய்றத செஞ்சிட்டு பொய் வேற சொல்லிட்டு சுத்துறார்.. சரியான பித்தலாட்டம் – உண்மையான‍ வாக்குவாதத்தை கூறிய சிராஜ் !

மேலும் ஒரு விக்கெட் கூட கைப்பற்றி இருந்தார். இந்த சூழ்நிலையில் அவரை வைத்து டிராவிஸ் ஹெட்டுக்கு பவுன்சர் பந்துகளை வீச வைக்க ரோஹித் சர்மா முயற்சி செய்யவில்லை. இது நல்ல கேப்டன் சிப் கிடையாது மேலும் அவர் மந்தமாக இருந்தார். மேலும் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் அவர் சிறப்பாக கேப்டன்ஷிப் செய்யவில்லை” என்று ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார். முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா விளையாடாத நிலையில் அவருக்கு பதிலாக கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்திய பும்ரா இந்திய அணியை வெற்றி பெற வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles