தகாத வார்த்தையில் திட்டியது ஹெட் தான்.. செய்றத செஞ்சிட்டு பொய் வேற சொல்லிட்டு சுத்துறார்.. சரியான பித்தலாட்டம் – உண்மையான‍ வாக்குவாதத்தை கூறிய சிராஜ் !

முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றிப் பெற்றதை ஈடு கட்டும் வகையில் அடிலெய்டு டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆதிக்க வெற்றிப் பெற்று தொடரை சமன் செய்துள்ளது.

- Advertisement -

பகல் இரவு மற்றும் பிங்க் பந்து டெஸ்ட் போட்டியான இதில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக செய்தது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்தியா 180 ரன்களுக்குச் சுருண்டது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியா டிராவிஸ் ஹெட்டின் அதிரடியில் 337 ரன்கள் குவித்து 157 ரன்கள் முன்னிலையைப் பெற்றது.

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்சில் டிராவிஸ் ஹெட் ஒருநாள் போட்டிப் போல பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை விளாசினார். இந்திய அணியைப் பார்தாலே டிராவிஸ் ஹெட் அடிக்கிறார் என்ற கோபம் அனைத்து இந்திய ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அது மேலும் கூட, பார்டர் கவாஸ்கர் தொடர் இன்னும் விறுவிறுப்பாகவும் வகையில் ஹெட்டும் சிராஜும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

- Advertisement -

140 ரன்கள் விளாசிய ஹெட் இந்திய பந்துவீச்சாளர் சிராஜ் வீசிய ஃபுல் டாஸ் பந்தை தவறவிட்டு க்ளீன் போல்டானார். அவுட் ஆகிய பிறகு அவர் சிராஜை தகாத வார்த்தையில் திட்ட பதிலுக்கு சிறாஜும் கோபத்தைக் காட்டியுள்ளார். இது பெரிய பரபரப்பை உண்டாக்கியது. போட்டி முடிந்த பிறகு இது குறித்து டிராவிஸ் ஹெட்டிடம் என்ன நடந்தது என செய்தியாளர்கள் கேட்டனர்.

அதற்கு அவர், ” நான் அவுட்டானப் பிறகு சிராஜிடம் சிறப்பாக பந்து வீசியதாகக் கூறினேன். ஆனால் அவர் அதைத் தவறாக புரிந்துக் கொண்டு கோபத்தில் கத்தினார். ” என பேட்டி அளித்தார். டிராவிஸ் ஹெட் கூறியதை சமூக வலைத்தளத்தில் சுத்தப் பொய்யென ரசிகர்கள் கடுமையாகத் தாக்கினர். பின்னர், இது குறித்து சிராஜ் பேசினார்.

- Advertisement -

அவர் கூறியதாவது, ” உண்மையில் நான் அவருக்கு எதிராக பந்துவீசியதை விரும்பினேன். நல்லப் பந்தில் ஒருவர் சிக்ஸ் அடித்தால் நிச்சயம் கோபமாகும். பிறகு அடுத்தப் பந்தில் விக்கெட்டை எடுத்தால் ஆரவாரத்தில் கத்தத் தோன்றும். அதைத் தான் நான் செய்தேனே தவிர அவரை நான் உண்மையாக கெட்ட வார்த்தையில் திட்டவில்லை. “

மேலும், ” ஆனால் டிராவிஸ் ஹெட் என்னைத் திட்டிவிட்டு பிறகு தொலைக்காட்சிப் பேட்டியில் அவர் என்னை பாராட்டியதாக பொய்யும் பேசியுள்ளார். கிரிக்கெட் ஜென்டில்மேன் ஆட்டம் ஆகும் என்பதால் நான் எல்லோரையும் மதித்தே நடக்க விரும்புகிறேன். டிராவிஸ் ஹெட்டின் இந்த நடத்தை மிகவும் தவறு. ” என சிராஜ் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles