சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி மூன்று போட்டிகளில் விளையாடி மொத்தமாக 9 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவரின் பட்டியலில் முதலிடத்தை பிடித்தார்.
இந்த சூழ்நிலையில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலியிடம் பேசுவதற்கே வருண் சக்கரவர்த்தி பயந்தார் என முன்னாள் இந்திய பந்துவீச்சு பயிற்சியாளர் பரத் அருண் கூறியிருக்கிறார்.
வருண் சக்கரவர்த்தி முதன்முதலாக 2021ஆம் ஆண்டு அப்போதைய தற்காலிக கேப்டனாக செயல்பட்ட, சிகார் தவான் தலைமையில் இலங்கை அணிக்கு எதிரான தொடரில் விளையாடுவதற்கு தேர்வு செய்யப்பட்டார். அதற்குப் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் விராட் கோலி தலைமையில் விளையாட தேர்வானார். மூன்று போட்டிகளில் விளையாடியும் அவரால் ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை.
அதற்குப் பிறகு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அறிமுகமான வருண், அந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டதால், அதற்குப் பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இடம் பிடித்து அதிலும் சிறப்பாக செயல்பட்டு அவரது வாழ்க்கை இப்போது ஏறு முகமாக மாறி இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பௌலிங் கோச் பரத் அருண் வருண் குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “வருண் சக்கரவர்த்தி இந்திய அணியில் நுழைந்தபோது ஆரம்பத்தில் கொஞ்சம் பயந்தவராக இருந்தார். அவருக்கு என்ன மாதிரியான ஃபீல்டிங் செட் அப் வேண்டும் என்று கேட்க விராட் கோலியிடம் பயந்தார். ஆனால் இப்போது அவர் என்ன மாதிரியான வீரராக மாறி இருக்கிறார் என்று பாருங்கள்.
இதையும் படிங்க:புதிய கேப்டன் யாரு? அமைதி காக்கும் டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம்.. பதவியேற்க மறுத்த கேஎல் ராகுல்.. என்ன காரணம்?
கிரிக்கெட்டின் எலைட் லெவல் என்பது 90 சதவீதம் அவர் அவரின் மனநிலையை பொறுத்தது. இது தற்போது வருண் அதை முற்றிலுமாக நிரூபித்து விட்டார். அவருக்கு என்ன மாதிரியான ஃபீல்ட் செட்டப் வேண்டும், என்ன மாதிரியான பந்து வீசப் போகிறார் என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறார். தனக்கு தகுந்தவாரே பீல்ட் செட்அப் வைத்துக் கொள்கிறார். அந்த அளவுக்கு தன்னை அவர் முழுமையாக நம்புகிறார்” என்று பேசி இருக்கிறார்

