தோனி பும்ராவுக்கே இடம் இல்லை.. யுவராஜ் வெளியிட்ட ஆல் டைம் பேவரைட் அணி.. ஆச்சரியப்படுத்தும் பிளேயிங் லெவன்

இந்திய ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் பங்கு பெற்ற உலக சாம்பியன்ஷிப் 2024 லீக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி தற்போது சாம்பியன் கோப்பையை கைப்பற்றி இருக்கிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய சாம்பியன்ஸ் அணியின் கேப்டன் லெஜன்ட் வீரர் யுவராஜ் சிங் தன்னுடைய ஆல் டைம் பிளேயிங் லெவன் அணியை தற்போது அறிவித்து இருக்கிறார். அதில் மூன்று ஐசிசி தொடர்களை வென்று கொடுத்த மகேந்திர சிங் தோனிக்கு இடமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய அணியின் பெஸ்ட் ஆல் ரவுண்டர் வீரராக கருதப்பட்ட யுவராஜ் சிங் 2007ஆம் ஆண்டு ஒரு நாள் உலகக்கோப்பை தோல்விக்கு பிறகு கேப்டன் பொறுப்பு யுவராஜ் சிங் அல்லது தோனி இந்த இருவரில் யாருக்கு ஒப்படைக்கலாம் என்ற கருத்து நிலவிய நிலையில் சச்சின் டெண்டுல்கரின் ஆலோசனைக்கு இணங்க கேப்டன் பொறுப்பு மகேந்திர சிங் தோனிக்கு கொடுக்கப்பட்டது. தனது கேப்டன்சியை ஏற்றுக் கொண்ட தோனி 2007ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் அதற்கு அடுத்து வந்த அனைத்து ஐசிசி தொடர்களையும் வென்று தான் ஒரு சிறந்த இந்திய அணியின் கேப்டன் என்பதையும் நிரூபித்தார். ஆனால் தனக்கு கேப்டன்சி வராதது யுவராஜ் சிங்குக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று வெளியே ஒரு கருத்து நிலவியது. ஆனாலும் யுவராஜ் சிங் அவ்வப்போது தோனி குறித்து சில நல்ல கருத்துக்களை கூறி வந்தார். இந்த நிலையில் நாளடைவில் இருவரும் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வும் பெற்று விட்டனர்.

இந்த சூழ்நிலையில் யுவராஜ் சிங் அறிவித்திருக்கும் தனது ஆல் டைம் பேவரைட் அணியில் மகேந்திர சிங் தோனிக்கு இடமில்லை என்பது சற்று கவனத்தில் கொள்ளக்கூடிய விஷயமாக அமைந்திருக்கிறது. இந்த அணியில் யுவராஜ் சிங்கின் தொடக்க ஆட்டக்காரர்களாக இந்தியாவின் லெஜண்ட் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரிக்கி பாண்டிங் ஆகியோர் இருக்கிறார்கள். மேலும் மூன்றாவது மற்றும் நான்காவது வரிசையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இருக்கின்றனர்.

- Advertisement -

மிடில் வரிசையில் ஏபி டிவில்லியர்ஸ் மற்றும் ஆடம் கில்கிறிஸ்ட் ஆகியோரும், பந்து வீச்சாளர்களில் ஷேன் வார்னே, முத்தையா முரளிதரன் ஆகியோர் உள்ளனர். வேகப்பந்துவீச்சாளர்களில் மெக்ராத், வாஷிம் அக்ரம் மற்றும் ஆண்ட்ரூ பிலின்டாப் ஆகியோர் உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக இந்தியாவின் நம்பர் ஒன் வேதப்பந்துவீச்சாளரான பும்ராவுக்கு இதில் இடமில்லை.

இதையும் படிங்க:60 நாள் எந்த பயிற்சியும் இல்ல.. நேரா விளையாட தான் வந்தேன்.. அப்பதான் யுவராஜ் ஒரு விஷயம் சொன்னாரு- யூசுப் பதான் பேட்டி

யுவராஜ் வெளியிட்ட ஆல் டைம் பிளேயிங் லெவன் :

சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், ரோஹித் சர்மா, விராட் கோலி, ஏபி டி வில்லியர்ஸ், ஆடம் கில்கிறிஸ்ட், ஷேன் வார்ன், முத்தையா முரளிதரன், மெக்ராத், வாசிம் அக்ரம் மற்றும் ஆண்ட்ரூ பிளின்டாப்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles