இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 201 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி உள்ளது. இந்த சூழ்நிலையில் இது குறித்து பேசி இருக்கும் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி, தேவைப்பட்டால் இந்திய அணி டிக்ளர் செய்யவும் தயங்க கூடாது என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ரவி சாஸ்திரி டிக்ளர் குறித்து பேசுகையில் ” வியூக ரீதியாக இந்திய அணி நாளை ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டும். புதிய பந்தை விளையாடி முடித்த பிறகு ஆட்டத்தை வேகமாக நோக்கி நகர்த்த வேண்டும். வெற்றியை நோக்கி செல்ல வேண்டும் என்றால் நீங்கள் சில நேரங்களில் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும். தேவைப்பட்டால் எதிரணியின் ஸ்கோரை விட பின்தங்கியிருக்கும் போதே நீங்கள் டிக்ளர் செய்ய தயங்க கூடாது. நீங்கள் தென் ஆப்பிரிக்காவின் 489 ரன்கள் கடக்கும் வரை காத்திருக்க முடியாது.
இதையும் படிங்க: இப்படித்தான் விளையாடனும்.. பேட்ஸ்மேன்களுக்கே பாடம் எடுத்த பவுலர் குல்தீப் யாதவ்.. தென்னாபிரிக்க இரண்டாவது டெஸ்ட் சுவாரஸ்யம்
மாறாக 90 அல்லது 100 ரன்கள் பின் தங்கி இருக்கும் போது டிக்ளர் செய்துவிட்டு அதற்குப் பிறகு எதிரணியை விரைவாக ஆல் அவுட் செய்ய முயற்சிக்க வேண்டும். இது ஒரு மிகப்பெரிய சூதாட்டம் தான் ஆனால் வெற்றி பெற இது போன்ற வாய்ப்புகளை முயற்சி செய்ய தயங்க கூடாது” என்று ரவி சாஸ்திரி பேசியிருக்கிறார்.

