இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன கௌதம் கம்பீர், ஏன் தொடர்ந்து மாற்றங்களை செய்து அணியை குழப்பி வருகிறார் என்று இந்திய முன்னாள் தேர்வு குழு தலைவர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெற்றி பெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. இருப்பினும் தற்போது தென்னாப்பிரிக்க அணியின் வெற்றி அதிக அளவில் இருப்பதாக காணப்படுகிறது. மேலும் கௌதம் கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு அணியில் ஒரு வீரருக்கு நிரந்தர இடம் என்பதில்லாமல் தொடர்ந்து மாற்றங்களை செய்து வருகிறார்.
இதையும் படிங்க:இந்திய அணியில் நட்பு பாரபட்சமா?. சாய் சுதர்சனுக்கு ஏன் இத்தனை வாய்ப்பு.? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்
அது டெஸ்ட், டி20 மற்றும் ஒருநாள் என அனைத்து ஃபார்மேட் கிரிக்கெட்டிலும் ஒரு சில இடங்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் சுழற்சி முறையில் மாற்றப்பட்டு கொண்டே வருகிறார்கள். இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறும் போது “ஏன் அணியில் இவ்வளவு மாற்றங்கள் ஒவ்வொரு போட்டியிலும் புதிதாக யாராவது ஒருவர் அறிமுகம் ஆகிறார்கள், அதை அவர்கள் சோதனை அல்லது தவறான முடிவு என்று சொல்கிறார்கள். கௌதம் கம்பீர் என்ன வேண்டுமானாலும் கூறலாம். எனக்கு அதைப் பற்றி கவலை கிடையாது, நான் முன்பு கேப்டன் ஆகவும் தேர்வு குழு தலைவராகவும் இருந்திருக்கிறேன். எனக்கு என்ன கூறுகிறேன் என்ன பேசுகிறேன் என்று எனக்கு தெரியும்” என்று கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியிருக்கிறார்.

