இந்திய அணியில் நட்பு பாரபட்சமா?. சாய் சுதர்சனுக்கு ஏன் இத்தனை வாய்ப்பு.? கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்தியா தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறது. இதில் இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 500க்கும் மேற்பட்ட ரன்கள் தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஏற்கனவே முதலாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியடைந்துள்ள நிலையில் இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று சொந்த மண்ணில் தொடரை இழக்காமல் சமன் செய்ய போராடிக் கொண்டிருக்கிறது. இதில் கடந்த போட்டியில் காயம் அடைந்த இந்திய அணியின் கேப்டன் சுப்மான் கில்லுக்கு பதிலாக இடது கை பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் இடம் பெற்றிருந்தார். 40 பந்துகளை எதிர்கொண்டு 15 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கட்டை பறி கொடுத்தார்.

- Advertisement -

இருப்பினும் சாய் சுதர்சன் இதற்கு முன்னர் வாய்ப்பு கிடைத்த டெஸ்ட் போட்டிகளிலும் பெரிய அளவில் விளையாடவில்லை. ஆனால் இவருக்கு மட்டும் ஏன் தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன என்று இந்திய அணி ரசிகர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அதில் ஒரு சிலர் ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் கில்லுக்கு நெருங்கிய நண்பராக இருப்பதால்தான் வாய்ப்புகள் பெறுகிறார் என்று கூறுகிறார்கள். மேலும் ஒரு சிலர் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வரும் ருத்ராஜ் சிஎஸ்கே வீரர் என்பதால் தான் வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது என்றும் கூறி வருகின்றனர்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles