இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி செய்தது நியாயமே இல்லாத விஷயம் என்று இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலெஸ்டர் குக் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
புனேவில் நேற்று நடைபெற்ற நான்காவது ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே ஆகியோரின் உதவியுடன் 181 ரன்கள் குவித்தது. இதில் 53 ரன்கள் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட சிவம் டுபெ தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக பந்து வீச வரவில்லை. எனவே அவருக்கு பதிலாக அதே வகை ஆல் ரவுண்டர் வீரரான ரமண்தீப் சிங் உள்ளே வந்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக ஒரு முழுமையான வேகப்பந்து வீச்சாளர் ஹர்சித்ராணா உள்ளே கொண்டு வரப்பட்டார்.
அவர் உள்ளே வந்தது மட்டுமல்லாமல் முக்கிய மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி இங்கிலாந்து அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் நேற்று தோல்வி அடைந்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜாஸ் பட்லர் இந்திய அணி செய்தது ஏற்க முடியாது என்று வெளிப்படையாக அறிவித்துவிட்டார். இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து முன்னாள் வீரர் அலெஸ்டர் குக் இந்திய அணி செய்தது முற்றிலும் நியாயம் இல்லாதது என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து குக் விரிவாக கூறும்போது ” ஐபிஎல் தொடரில் இதுவரை ஒரே ஒரு ஓவர் மட்டுமே வீசி இருக்கும் பேட்டிங் ஆல் ரவுண்டர் சிவம் துபேவுக்கு பதிலாக ஒரு முழுமையான வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவை பந்து வீச வைத்தது முற்றிலும் நியாயமற்றது. இதைச் செய்ய அனுமதிப்பது என்பது ஒரு முற்றிலும் பைத்தியக்காரத்தனமான ஒரு விஷயமாகும்.
இதையும் படிங்க:பிசிசிஐ இனி அந்த பையன மறக்காதீங்க.. அவரோட ரெக்கார்டு எடுத்து பாருங்க புரியும் – தினேஷ் கார்த்திக் கருத்து
ஆனாலும் இந்த போட்டியில் அறிமுகமாகி சிறப்பாக செயல்பட்ட ஹரஷித் ராணாவுக்கு போதுமான கிரெடிட் கொடுக்கப்பட வேண்டும். நிஜமாக நேற்று அவரை விளையாட அனுமதித்திருக்கக் கூடாது. அவர் விளையாடியது கேப்டனுக்கு ஒரு கூடுதல் வாய்ப்பை கொடுப்பது போன்றதாகும்” என்று பேசி இருக்கிறார். நேற்றைய போட்டியில் வெற்றி பெறும் நிலையில் இருந்த இங்கிலாந்து அணி ராணா வீழ்த்திய மூன்று விக்கெட்டுகளினால் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

