பிசிசிஐ இனி அந்த பையன மறக்காதீங்க.. அவரோட ரெக்கார்டு எடுத்து பாருங்க புரியும் – தினேஷ் கார்த்திக் கருத்து

இந்திய கிரிக்கெட்டில் இருந்து சமீபத்தில் ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் உள்நாட்டு டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறார்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தினேஷ் கார்த்திக் இந்திய இளம் வீரர்கள் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தினேஷ் கார்த்திக் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த நிலையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் எஸ்ஏ டி20 கிரிக்கெட் லீக் தொடரில் விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அங்கு விளையாடி வந்தாலும் இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளையும் கவனிக்காமல் இருந்ததில்லை.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வரும் இந்திய அணியில் திலக் வர்மா குறித்தும், மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் குறித்தும் தினேஷ் கார்த்திக் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார். திலக் வர்மா விளையாடும் விதம் உண்மையிலேயே அபாரமாக இருக்கிறது என்றும் ஸ்ரேயாஸ் ஐயர் அடுத்த கேப்டனாக இருக்க தகுதியான நபர் எனவே இவரை பிசிசிஐ புறக்கணிக்க கூடாது என்று சில கருத்துக்களை பேசி இருக்கிறார்.

இது குறித்த தினேஷ் கார்த்திக் விரிவாக கூறும்போது “திலக் வர்மா சென்னையில் விளையாடியது என்பது மிகவும் ஒரு அற்புதமான இன்னிங்ஸ். அவர் சூழ்நிலையை புரிந்து கொண்டு சரியாக விளையாடினார். அவர் வலிமையிலிருந்து இன்னும் பலமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக எதிராகவும் சிறப்பாக விளையாடட்டும். அவர் எப்போதுமே பெங்களூர் அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

ஸ்ரேயாஸ் ஐயர் இந்த தொடரில் சரியாக கவனிக்கப்படுவதில்லை என்று நான் நினைக்கிறேன். அவர் தொடர்ந்து பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என்றால் அவர் கேப்டனாக இருப்பதற்கான வாய்ப்புகளே மிக அதிகம். அவர் 100% கேப்டனாக இருக்கக்கூடிய ஒரு தகுதியான நபர். பல நாட்களுக்குப் பிறகு அவர் மீண்டும் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். எனவே அவரை பிசிசிஐ புறக்கணிக்காமல் தொடர்ந்து வாய்ப்புகள் கொடுக்க வேண்டும்” என்று தினேஷ் கார்த்திக் கூறியிருக்கிறார். தினேஷ் கார்த்திக் வருகிற ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆலோசகராகவும் பேட்டிங் பயிற்சியாளராகவும் செயல்பட இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பெங்களூர் அணியின் புதிய கேப்டனை விரைவில் அறிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கலாம்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles