உறுதியா சொல்றேன்.. இந்த 2 விஷயத்தை பார்த்தா இந்திய அணிதான் ஜெயிக்கும் – முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இந்த தொடரை இந்திய அணி வெல்லும் என்று அதற்கான காரணம் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றியும், இரண்டாவது போட்டியில் தோல்வியும், மூன்றாவது போட்டியில் டிராவிலும் முடிந்திருக்கிறது. மேலும் நான்காவது டெஸ்ட் போட்டி நாளை நடைபெற உள்ள நிலையில் இதில் இரண்டு அணிகளும் வெற்றி பெற மிக தீவிரமான திட்டங்களை தயார் செய்து வருகின்றன.

- Advertisement -

இந்திய அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து அவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் விளையாடும் அணியில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். அதேபோல ஆஸ்திரேலியா அணியில் தொடக்க ஆட்டக்காரர் மெக்ஸ்வீனி தொடர்ச்சியாக ஆட்டம் இழந்து வருவதால் அவருக்கு பதிலாக உள்நாட்டு தொடரில் விளையாடிய சாம் கான்ஸ்டாஸ் அடுத்த போட்டியில் களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளராக விளங்கி இந்திய அணி ஆஸ்திரேலியாலில் பார்டர் கவாஸ்கர் டிராபி வெல்ல முக்கிய காரணமாக அமைந்த ரவி சாஸ்திரி இந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெறும் எனவும், சூழ்நிலைகள் தற்போது இந்திய அணிக்கு சாதகமாக இருப்பதாக சில முக்கிய கருத்துகளை விவரித்து கூறி இருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து ரவி சாஸ்திரி கூறும்போது “அடுத்த போட்டி மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று நினைக்கிறேன். இந்தத் தொடர் கடந்து வந்த விதத்தை பார்க்கும் போது இந்திய அணி வெற்றி பெறும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஏனென்றால் தற்போது மூன்று போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. எனவே இதில் அடுத்த போட்டியில் வெளிநாட்டு அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.1-1 என்ற கணக்கில் செல்வதுதான் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கு சிறந்த வழியாகும்.

இதையும் படிங்க:மத்தவங்க தான் பும்ராவுக்கு பயப்படனும.. ஆனா டிராவிஸ் ஹெட் ஒரு பொருட்டாக கூட மதிக்காமல் பொளக்கிறார்.. காரணம் இது தான் – கிரேக் சேப்பல்

அது மட்டுமல்லாமல் நீண்ட நாட்கள் கழித்து ஆஸ்திரேலியாவின் டாப் வரிசை பேட்டிங் ஆர்டர் என் உடையும்படியாக இருக்கிறது. இதற்கு முன்னர் இப்படிப்பட்ட அணியை நான் பார்த்ததில்லை. அவர்களை இந்திய அணி உடைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். அடுத்த போட்டியில் விளையாட வாய்ப்பு பெற்றுள்ள சாம் கான்ஸ்டாஸ் புத்துணர்ச்சியாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தலாம். ஆனால் டெஸ்ட் போட்டிகள் முற்றிலும் வித்தியாசமானது. அவரது டெக்னிக் மாறுவதற்கான வாய்ப்புகள் இங்கு அதிகம். இருப்பினும் அவர் ஆஸ்திரேலியா அணியின் வருங்கால வீரராக இருக்கலாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles